கொரோனா வைரஸ் பயம்: விலை உயர்ந்த பலாக்காய்! அசைவத்திற்கு சிறந்த மாற்றா?

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் பலாக்காயின் விலை 120 சதவவீதம் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.  

Last Updated : Mar 11, 2020, 05:15 PM IST
கொரோனா வைரஸ் பயம்: விலை உயர்ந்த பலாக்காய்! அசைவத்திற்கு சிறந்த மாற்றா? title=

இது ஒரு கட்டுக்கதை என்றாலும், கொரோனா வைரஸின் போது இறைச்சி சாப்பிடுவதற்கான ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், ஆட்டிறைச்சி மற்றும் கோழியின் விற்பனை வேகமாக குறைந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவிலும் கண்டுள்ளது. சுமார் 1 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளானர். இந்தியாவில் இப்போது சுமார் 50 நேர்மறை கொரோனா வைரஸ்கள் பதிவாகியுள்ளன என்று கூறலாம். இவர்களில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலி குடிமக்கள்.

கொரோனா விலங்குகளிடம் இருந்து பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் மக்கள் பலர் சிக்கன், மட்டன் வாங்காமல் தவிர்த்து வருகின்றனர். ஆனால் சிக்கன் மட்டனில் இருந்து கொரோனா பரவாது என்பதே உண்மை.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் சிக்கன் மற்றும் மட்டனுக்கு மாற்றாக மக்கள் பலாக்காய்களை வாங்கி செல்கின்றனர். பலாக்காயை வைத்து சமைக்கப்படும் உணவு வகைகளின் ருசி சிக்கன் போலவே சுவையானதாக   இருப்பதால் அம்மாநில மக்கள் பலாக்காயை விரும்புகிறார்கள் என்று கூறப்படுகிறது. 

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியில் பலாக்காயின் விலை 120 சதவிகிதம் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, சிக்கனை விட பலாக்காய் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News