Health Tips: வியாதிகளை விரட்ட, தொற்றை துரத்த இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்
Immunity Booster Foods: கோவிட்-19 பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
Immunity Booster Foods: இந்நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
இதற்காக, மக்கள் அனைத்து வகையான மருந்துகள், வைட்டமின்கள், சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு புறம், கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் இருக்க, மறுபுறன், வழக்கமாக இருக்கும் நோய்களின் அபாயமும் வேகமாக அதிகரித்துள்ளது. மாறிவரும் பருவநிலை காரணமாக, மக்கள் சளி, காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
எனினும், சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக அதிகரிக்க முடியும். அத்தகைய சில முக்கிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காய் சட்னி: நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. காலையில் நெல்லிக்காய் சட்னி சாப்பிடுவதன் மூலம், குடும்பத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். பலர் நெல்லிக்காயை தேனுடன் செர்த்து சாப்பிடுவார்கள். நெல்லிக்காய் அனைத்து வடிவங்களிலும் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
ALSO READ | Immunity Booster: நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன!
துளசி, இஞ்சி, இலவங்கப்பட்டையின் கஷாயம்: துளசி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் செடியாகும். துளசி கஷாயத்துடன் நாளை துவக்கினால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டையும் பல வித மருத்துவ குணங்கள் கொண்டவை. இவை பருவகால நோய்களில் இருந்து காக்கும். துளசியுடன், தேன் மற்றும் கருப்பு மிளகும் கலந்து சாப்பிடலாம்.
பாதாம், பேரிச்சம் பழம் மில்க் ஷேக்: பேரீச்சம்பழம் பல மருத்துவ குணங்கள் நிறைந்த உலர் பழமாகும். இதை இரவு முழுவதும் பாலில் ஊறவைக்கவும். அதன் பிறகு, காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்கள். இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது தவிர, இரவில் ஊறவைத்த பாதாம் மற்றும் பேரிச்சம் பழத்தை ஒன்றாக பாலில் போட்டு மிக்ஸியில் அரைத்து உட்கொள்ளலாம். முக்கியமாக, இது குழந்தைகளுக்கும் நன்மை பயக்கும்.
திராட்சை: உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன் பொட்டாசியம், பீட்டா கரோட்டின், கால்சியம் போன்ற வைட்டமின்களும் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளை வலுவாக வைக்கிறது.
ALSO READ | கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வைட்டமின் டி? சாப்பிட வேண்டிய உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR