Side effects of Almond: உலர்ந்த பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். உலர் பழங்கள் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், உடலுக்கேற்ற கனிமங்கள், நார்சத்து ஆகியவற்றை வழங்குகின்றன. இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம் பருப்பு பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம். பாதாம் பருப்பில் புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. அவை உடல் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், உடலுக்கு எனர்ஜியையும் தருகின்றன. நீங்கள் பாதம் பருப்பை (Almond) அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறவைத்தும் சாப்பிடலாம். இருப்பினும், பாதாம் சிலருக்கு ஆபத்தானது. எனவே அவர்கள் பாதாமை தவிர்க்க வேண்டும்.
பிபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள்:
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாமை உட்கொள்ளக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு, பாதாம் சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.
ALSO READ | Health News: கொண்டைக் கடலையின் அற்புதமான ஊட்டச்சத்துகள்
கிட்னி ஸ்டோன் பிரச்சினைகள் உள்ள நோயாளிகள்:
பித்தப்பையில், சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பாதாமை உட்கொள்ளக்கூடாது. அவர்கள் பாதாமை சாப்பிட்டால், பாதாமில் உள்ள பாதாம் ஆக்சலேட்டால், அந்த உறுப்புக்கள் மேலும் சேதமடையக்கூடும்.
செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள்:
செரிமானப் பிரச்சினையை எதிர்க்கொள்பவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. பாதாமில் புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகம். இதன் காரணமாக, அதை உட்கொள்ளும் போது ஜீரணிக்க அதிக கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அதேபோல அசிடிட்டி எனப்படும் அமிலத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களும் பாதாம் பருப்பிலிருந்து விலகி இருப்பது நல்லது. பாதாம் பருப்பில் உள்ள நார்சத்து வாயு சிக்கலை ஏற்படுத்தும்.
உடல் எடை குறைக்க ஆசைபாடுபவர்கள்:
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் பாதாம் சாப்பிடக்கூடாது. பாதாம் பருப்பு அதிக கலோரிகளையும் கொழுப்பையும் கொண்டுள்ளது. எனவே, பாதாம் பருப்பை அதிக அளவில் சாப்பிடுவது எடையைக் குறைப்பதை விட உங்கள் உடலில் கொழுப்பை அதிகரிக்கும்.
ALSO READ | உடலுறவின் போது உடைந்த ஆணுறுப்பு! இப்படி எல்லாம் நடக்குமா? அறிந்து கொள்ளுங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR