காய்கறிகள் மற்றும் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பழங்கள் என்றுமே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால், பழங்களும் அவற்றின் சாறுகளும் மக்களால் விரும்பி எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதிலும், மாதுளம்பழத்தின் நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மாதுளம்பழத்தின் பழம், கொட்டை, தோல், உள்ளிருக்கும் பஞ்சு போன்ற நார்ப்பகுதி என அனைத்துமே உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தவை ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதுளம்பழத்தில் கொழுப்பு குறைவு


மாதுளையில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது, ஆனால் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளதால், நோயாளிகளும் மாதுளம்பழத்தை சாப்பிடலாம். ஆக்ஸிஜனேற்றங்கள், இதய ஆரோக்கியம், சிறுநீர் பிரச்சனை ஏற்படாமல் தவிர்ப்பது உட்பட பலவேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது மாதுளை. 


மாதுளையின் ஊட்டச்சத்துகள்


வைட்டமின்கள் தாதுக்கள் நிரம்பிய மாதுளையின் ஊட்டச்சத்து ஆரோக்கிய நன்மைகளால், இந்தப் பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


மேலும் படிக்க | Weight Loss: ஒல்லியாவது சிம்பிள்! ‘இந்த’ பழக்கத்தை கொண்டு வந்தா ஈசியா எடை குறையும்


மாதுளையின் உள்ள முத்து வடிவிலான சிவப்பு நிற பழங்களும், அதில் உள்ள விதைகளும் உண்ணக்கூடியவை. மாதுளம்பழத்திற்குள் உள்ள அடர்த்தியான வெண்ணிற உட்புற சதைக்குள் மாதுளம் முத்துக்கள், பதிந்து அழகாய் இருக்கின்றன.


ஆரோக்கியத்திற்கு மாதுளை


நோய் எதிர்ப்பு சக்தி முதல் மூளை ஆரோக்கியம் வரை ஆரோக்கியத்தின் பல அம்சங்களை ஆதரிக்கும் ஆற்றலைக் கொண்ட மாதுளை, நமது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தில் கட்டாயம் இடம் பிடிக்க வேண்டிய பழம் ஆகும்.


மாதுளம் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்


நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மாதுளம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியலைத் தெரிந்துக் கொண்டால், இதனை தவிர்க்கமாட்டீர்கள்.


மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்கள் 'இந்த' உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்! 


ஒரு சராசரி (282-கிராம்) அளவுள்ள மாதுளைப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்து பட்டியல் இது...


மாதுளையின் ஊட்டச்சத்து பட்டியல்


கலோரிகள்: 234
புரதம்: 4.7 கிராம்
கொழுப்பு: 3.3 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 52 கிராம்
சர்க்கரை: 38.6 கிராம்
ஃபைபர்: 11.3 கிராம்
கால்சியம்: 28.2 mg, அல்லது தினசரி மதிப்பில் 2% (DV)
இரும்பு: 0.85 மிகி, அல்லது 5% DV
மக்னீசியம்: 33.8 மி.கி, அல்லது டி.வி.யில் 8%
பாஸ்பரஸ்: 102 mg, அல்லது DV இன் 8%
பொட்டாசியம்: 666 மிகி, அல்லது 13% DV
வைட்டமின் சி: 28.8 மி.கி, அல்லது 32% டி.வி
ஃபோலேட் (வைட்டமின் B9): 107 mcg, அல்லது DV இன் 27%


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா? இந்த டயட் சார்ட் ட்ரை பண்ணுங்க.... உங்க சுகர் வெவல் கட்டுப்பாட்டில் இருக்கும்


மாதுளையின் ஊட்டச்சத்து நன்மைகள் இவை...


சத்துக்கள் நிரம்பியது 
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது 
வீக்கத்தைத் தடுக்க உதவும் 
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்  
இதய ஆரோக்கிய நன்மைகள்.
சிறுநீரகத்தை பாதுகாக்கும்  
நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் கொண்டது


மேலும் படிக்க | பயங்கரமா எடை ஏறுதா? வேகமா குறைக்கலாம்... காலை உணவில் இதை சாப்பிடுங்க, போதும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ