நீரிழிவு நோயாளியா? இந்த டயட் சார்ட் ட்ரை பண்ணுங்க.... உங்க சுகர் வெவல் கட்டுப்பாட்டில் இருக்கும்

Diabetes Diet Chart: நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 18, 2023, 09:54 AM IST
  • உணவு அட்டவணையால் உடலில் சரியான ஆற்றல் சேமிப்பு இருக்கும்.
  • உடலில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
  • இதய நோய்களுக்கான ஆபத்துகள் குறையும்.
நீரிழிவு நோயாளியா? இந்த டயட் சார்ட் ட்ரை பண்ணுங்க.... உங்க சுகர் வெவல் கட்டுப்பாட்டில் இருக்கும் title=

நீரிழிவு நோயாளிகளின் உணவு அட்டவணை: நீரிழிவு நோய் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். நீரிழிவு நோய் மரபணு ரீதியான காரணங்களாலும் ஏற்படலாம், அல்லது, நமது மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும் ஏற்படலாம். இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாததால், நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு ஆபத்தான நோயாகும். இது அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் காரனமாக நீரிழிவு நோயாளியின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கண்களுடன் முக்கியமான உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. 

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, பல கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சில சமயம் இந்த நோயாளிகளால் தங்கள் உணவுகளின் அளவை சரியாகக் கட்டுப்படுத்த முடியாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால், நீரிழிவு நோயாளிகள் ஒரு ஆரோக்கியமான உணவு அட்டவணையை உருவாக்கிக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோயாளிகளின் உணவு அட்டவணை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நீரிழிவு நோயாளிகளின் உணவு அட்டவணை தொடர்பான முக்கிய விஷயங்கள்

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சரியான அட்டவணை போட்டு உணவு உட்கொண்டால், உணவு கட்டுப்பாட்டை பராமரிக்க உதவி கிடைக்கும். 

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கும் கொள்ளு... டாப் 5 பயன்கள் இதோ! 

நீரிழிவு நோயாளிகளின் உணவு அட்டவணையைப் பின்பற்றுவதன் நன்மைகள்

நீரிழிவு உணவு அட்டவணையைப் பின்பற்றுவது நோயாளிகளுக்கு அவர்களின் உணவில் சரியான கொழுப்புகள், புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து போன்றவற்றின் விகிதாசார கலவையை பராமரிக்க உதவுகிறது. இது அவர்களின் உடலின் பல்வேறு உறுப்புகளை அவர்களின் தேவைக்கேற்ப நிர்வகித்து, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இதில் மற்ற நன்மைகள் அடங்கும்.

உணவு அட்டவணையின் (டயட் சர்ட்) நன்மைகள்

- உடலில் சரியான ஆற்றல் சேமிப்பு இருக்கும்
- உடலில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
- இதய நோய்களுக்கான ஆபத்துகள் குறையும்.
- நீரிழிவு நோயுடன் தொடர்புடைய பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் குறையும். 
- எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.
- சரியான ஊட்டச்சத்து காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். 

நீரிழிவு நோயாளிகளின் உணவு அட்டவணையில் என்ன இருக்க வேண்டும்?

இந்த உணவு அட்டவணை அந்தந்த நபருக்கு ஏற்றவாறு மாறுபடும். தங்களுக்கான அட்டவணையை தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து தயார் செய்துகொள்வது நல்லது. இருப்பினும், இந்த அட்டவணையில் இருக்கும் சில பொதுவான அம்சங்களை இங்கே காணலாம்.

- போதுமான அளவில் புரதம்: பால் பொருட்கள், முட்டை, பருப்பு வகைகள், பட்டாணி, சோயாபீன்ஸ் போன்றவை.

- விகிதாசார கார்போஹைட்ரேட்டுகள்: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், அரிசி போன்றவை.

- குறைந்த கொழுப்பு உணவு: சாலடுகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் அல்லது பட்டாணி போன்றவை.

- சரியான அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை.

(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பை தொங்குவதை சீக்கிரம் குறைக்க ஒரே வழி..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News