Omicron Warning Signs: கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாடு சுவாச செயல்முறையை பாதிப்பதுடன் நோயாளியின் வயிற்றையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, வயிற்று வலி, குமட்டல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிகுறிகள் இருந்தால், இவற்றை சாதாரண காய்ச்சலைப் போல் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக கோவிட் பரிசோதனை செய்துகொள்வது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள். 


இந்த அறிகுறிகள் தோன்றலாம்


நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரானின் சில அறிகுறிகள் டெல்டாவிலிருந்து வேறுபட்டவை. எனினும் சிலர் சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில், இவை மட்டுமல்லாமல், மேலும் சில அறிகுறிகளும் உள்ளன. 


ஓமிக்ரானின் சில அறிகுறிகள் (Omicron symptoms) வயிற்றுடன் தொடர்புடையவையாகவும் உள்ளன. காய்ச்சலின்றி வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. 


சுவாச அறிகுறிகள் அல்லது காய்ச்சல் இல்லாமல் வயிறு தொடர்பான இந்த பிரச்சனைகள் இருந்தால், தாமதிக்காமல் கொரோனா பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. 


நிபுணர்களின் கூற்றுப்படி, புதிய தொற்று மாறுபாட்டில், பெரும்பாலான மக்களுக்கு வயிற்று வலிக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் இந்த அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு ஆரம்பத்தில் சளி, ஜலதோஷம் இல்லாமல் வயிற்றுப் பகுதியில் மட்டும் அசௌகரியம் ஏற்படும். முதுகுவலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் இதில் அடங்கும். ஓமிக்ரான் காரணமாக, வயிற்றின் மெல்லிய மேல் பகுதி (gut mucosa) பாதிக்கப்பட்டு அதில் வீக்கம் ஏற்படுகின்றது. 


ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை


அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 


வயிறு தொடர்பான இந்த அறிகுறிகள் இரண்டு டோஸ் தடுப்பூசியை (Vaccination) செலுத்திக்கொண்டவர்களிடமும் தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறிகள் தீவிரமானவை அல்ல. வயிற்று வலி, குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவற்றை பொதுவான காய்ச்சலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சொந்தமாக எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. தொடர்ந்து நீர் அருந்த வேண்டும், லேசான உணவை உட்கொள்வது நல்லது. போதுமான உறக்கம் அவசியமாகும். காரமான உணவு மற்றும் மதுவை முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும். 


இந்த விஷயங்களை கவனித்துக்கொள்ளுங்கள்


நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தூய்மையை பராமரிப்பது மிக அவசியமாகும். புதிதாக சமைத்த உணவையே உட்கொள்ள வேண்டும். பழங்களை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். இதைத் தவிர, உணவைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். வெளி உணவைச் சாப்பிடக் கூடாது. கோவிட் (Covid-19) நெறிமுறையை முழுமையாகப் பின்பற்றவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Omicron முக்கிய செய்தி: ஜலதோஷமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதா? ஆய்வில் தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR