OMG!! கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது

தடுப்பூசி போடாதவர்கள் உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே சென்றால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2022, 02:38 PM IST
  • தடுப்பூசி போடப்படாத மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: பிலிபைன்ஸ் அதிபர்.
  • உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே சென்றால் உடனடியாக கைது: பிலிபைன்ஸ் அதிபர்.
  • பிலிப்பைன்ஸில் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
OMG!! கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது title=

மணிலா: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் அச்சமடைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தடுப்பூசி போடாதவர்கள் உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே சென்றால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என அவர் அறிவித்துள்ளார். 

நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய உரையில், தடுப்பூசி போடப்படாத மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சமூகத் தலைவர்களை டுடெர்டே கேட்டுக்கொண்டார். ஓமிக்ரான் (Omicron) மாறுபாடு பிலிப்பைன்ஸிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

மணிலாவில் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது

'இண்டிபெண்டன்ட்' அறிக்கையின்படி, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தலைநகர் மணிலா மற்றும் அண்டை பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இது தவிர இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் வீட்டிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதிய கட்டுப்பாடுகளின் கீழ், பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வகுப்புகளில் பங்குகொள்வதும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் பூங்காக்கள், தேவாலயங்கள் மற்றும் உணவகங்கள் குறைந்த திறனுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் 11 கோடி மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி (Vaccination) செலுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | இங்கிலாந்தில் புதிய உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை: அச்சத்தில் மக்கள்

'இது தேசிய அவசரநிலை'

‘இது தேசிய அவசரநிலை. ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களை கட்டுப்படுத்த நான் முடிவு செய்துள்ளேன்.’ என்று அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், 'தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களைத் தேடி, அவர்கள் வெளியே எங்கும் செல்ல வெண்டாம் என அவர்களை கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்து வீட்டுக்கு வெளியே சுற்றித்திரிந்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும்.’ என்றார். இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதாவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் அதிபர் தெரிவித்தார். 

முன்னரும் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டது

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிலிப்பைன்ஸில் டெல்டா மாறுபாடு வேகமாகப் பரவியபோது, ​​தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பவர்களை சிறையில் அடைப்போம் என்று டுடெர்டே மிரட்டினார். இதுவரை, பிலிப்பைன்ஸில் 28 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர், 51,700 பேர் இறந்தனர். 

அங்கு இதுவரை 43 பேர் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, வியாழக்கிழமையன்று,  அதிக எண்ணிக்கையிலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டது பதிவானது. அன்று நாட்டில் 17,220 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

ALSO READ | ஓமிக்ரானை ஓரங்கட்டி முன்னுக்கு வருகிறது புதிய IHU மாறுபாடு: பிரான்சில் 12 பேர் பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News