நமது உணவில் ருசியாக்கும் புளியின் புளிப்பு சுவை பலருக்கும் பிடித்தமானது. புளி சாதம் என்றாலே வாயில் எச்சில் ஊறும்.  ருசியைக் கொடுக்கும் புளி, ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நமது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கிறது என்று பார்த்தால், புளியின் மகத்துவம் புரியும். புளியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை புளியில் ஏராளமாக உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புளியில் ஹைட்ரோசிட்ரிக் அமிலம் இருப்பதால், புளியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் கொழுப்பு விரைவாக குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, இதய ஆரோக்கியத்திற்கும்ம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் புளி உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?


புளியைப் பற்றி அதிகம் அறியப்படாத ஆரோக்கிய நன்மைகள் மற்றும் புளி ஏன் உணவில் அவசியமானது என்பதை தெரிந்துக் கொள்வோம். 


மேலும் படிக்க | இந்த மாவுகளை பயன்படுத்திப் பாருங்க! கொலஸ்ட்ராலும் சர்க்கரையும் சட்டுன்னு குறையும்


சூப்பர்ஃபுட்கள் பற்றிய கவனத்தை கொடுக்கும் நாம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உணவின் சுவையை அதிகரிக்க செய்யும் புளிக்கு அதிக கவனம் கொடுப்பதில்லை. உண்மையில் புளி ஒரு பழம் ஆகும். புளியின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துக் கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புளி


ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கொண்டது புளி.நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி பலப்படுத்தும் உணவுப் பொருட்களில் புளிக்கும் முக்கியமான இடம் உண்டு.


கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் புளி


பொட்டாசியம் அதிகம் உள்ள புளி, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும், திரவத்தை சமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது. இதில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன, அவற்றில் சில கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை சுமூகமாக தீர்க்க 9 உணவுகள்! நல்ல கொழுப்புக்கு கேரண்டி தரும் டிப்ஸ்


விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புளி
வைட்டமின் சி ஆண்களின் விந்து தரம் மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். புளியில் உள்ளஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ஆண்களின் பாலியல் செயல்பாடுகள் ஊக்கமடையும்.


இரத்த அழுத்தத்தை பராமரிக்கும் புளி


 இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் புளி உதவும். ஏனென்றால், இதில் இருக்கும் மெக்னீசியம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இதிலுள்ள சிறப்பு பண்புகள் பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.


செரிமானத்திற்கு புளி


கார்மினேடிவ், ஆண்டிசெப்டிக், துப்புரவு முகவர் மற்றும் ஃபெப்ரிஃபியூஜாக செயல்படுகிறது புளி. குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளின் செயலிழப்பைக் கட்டுப்படுத்தும் வேலையை செய்கிறது புளி.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளி


புளி நமது அன்றாட உணவில் சுவையை சேர்க்கிறது, அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வெறும் புளிப்பு சுவை கொண்ட பழம் மட்டும் அல்ல, ஆரோக்கியத்திற்கான அற்புதமான பழம் ஆகும்.  


மேலும் படிக்க | ஹை கொலஸ்ட்ரால் பிரச்சனையா? இந்த  ஜூஸ் குடிச்சா ஜம்முனு கண்ட்ரோல் பண்ணலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ




விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது
புளியில் உள்ள வைட்டமின் சி ஆண்களின் விந்து தரம் மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இதனுடன், புளியில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.