28 வயதான அந்த நபர்,  சுவாசக் குழாய், நுரையீரல், இதயம் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல், கூரான முனை கொண்ட கத்தியை எப்படி விழுங்கினார் என்பது வியப்பாக உள்ளது  என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு அரிதான மற்றும் சவாலான மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்த நபரின் கல்லீரலில் இருந்து 20 செ.மீ நீளமுள்ள சமையலறை கத்தியை வெற்றிகரமாக அகற்றினர். மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இது போன்ற வினோதமான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


எய்ம்ஸில் பணியாற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் நிஹார் ரஞ்சன் டாஷ் கூறுகையில், “நாங்கள்  இதற்கு முன்னர், இவ்வளவு கூர்மையான விழுங்கிய சம்பவம் குறித்து கேள்விப்பட்டதேயில்லை. சிறு ஊசிகள் மற்றும் மீன் எலும்புகள் சிறுகுடலை துளையிட்டு, கல்லீரலுக்குள் சென்ற சம்பவங்களை பார்த்திருந்திருக்கிறோம் எனக் கூறினார்.


ALSO READ | ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண்ணை எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்


கத்தியை விழுங்கிய நபர், ஹரியானாவின் பால்வாலில் உள்ள தினசரி கூலித் தொழிலாளி என்றும் அவருக்கு மனநோய்  இருந்ததாகவும் கூறப்படுகிறது. கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததாகவும்,  அதற்கு அடிமையாகவில்லை என்றாலும், அடிக்கடி கஞ்சாவை எடுத்துக் கொண்டார் என்று மருத்துவர் கூறினார்.


கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் இருந்த சமயத்தில், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, தனது சமையலறையில் இருந்தபோது கத்தியை சாப்பிட வேண்டும் என தோன்றியதாகவும், அதனை மெல்ல முயன்றதாக்வும், முடியாமல் போகவே, அதனை தண்ணீர் குடித்து விழுங்கி விட்டதாகவும் மருத்துவர்களிடம் கூறினார். அவருக்கு ஒரு மாதமாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பின்னர், அவர் சாப்பிடுவதில் சிரமம், எடை இழப்பு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளை ஏற்பட்டது.  


வலி மிகவும் அதிகமாகி பொறுத்துக் கொள்ள முடியாமல் போன போது, மருத்துவரிடம் வந்தார்.


ALSO READ | Rafale ஒப்பந்தம்: பிரான்சிலிருந்து 5 ஜெட் விமானங்கள் புதன்கிழமை இந்தியாவை வந்தடையும்


அவர் முதலில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். “ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே மூலம் அவரது கல்லீரலில் கத்தி மாத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதை அகற்றுவது சவால்கள் நிறைந்துள்ளது என்பதால்,  அங்குள்ள மருத்துவர்கள் நோயாளியை எய்ம்ஸில் உள்ள இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்றுத் துறைக்கு அனுப்பினர், ” என டாக்டர் டாஷ் கூறினார்.


கத்தி அவரது கல்லீரலுக்குள் ஆழமாக சென்றுவிட்டதால், அதை அகற்றுவது மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.  அது கல்லீரலில் ஆழமான புண்களை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அவரது ஹீமோக்ளோபின் அளவும் மிக குறைவாக இருந்தது.


எண்டோஸ்கோபி மூலம் கத்தியை அகற்றுவது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால்,  உறுப்புகளுக்கு காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அந்த முறை நிராகரிக்கப்பட்டது என கூறிய மருத்துவர்கள், அவருக்கு ஹீமோக்ளீபின் குறைவாக இருப்பதால், அவருக்கு நீண்ட நேரம் மயக்க மருந்தும் கொடுக்க முடியாத நிலை இருந்தது என தெரிவித்தனர். அதனால், முதலில், அவருக்கு ஆண்டிபயோடிக் கொடுக்கப்பட்டது என்றனர்.


ALSO READ | Work From Home: அதிர்ச்சிகரமான  உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!


மூன்று மணி நேரம் நீடித்த ஒரு சவாலான அறுவை சிகிச்சையில், கத்தி அகற்றப்பட்டது என மருத்துவர் டாஷ் கூறினார். இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  நிபுணர் தவிர மயக்க மருந்து, கதிரியக்கவியல் மற்றும் இரைப்பை குடலியல் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவும் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டது  எனவும் அவர் கூறினார்.


நோயாளி ஏழு நாட்கள் ஐ.சி.யுவில் இருந்தார். அவர் இப்போது ஆபத்தில் இல்லை, ஐ.சி.யூ கவனிப்பில் இல்லை, டாக்டர் டாஷ் கூறினார். "அவரது வயிற்றில் அறுவை சிகிச்சையின் போது நாங்கள் ஒரு உணவுக் குழாயை வைத்திருந்தோம், அந்தக் குழாய் வழியாக அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. மிக விரைவில் அவருக்கு வாய்வழியாக உணவு கொடுக்க ஆரம்பிப்போம். அவர் உணர்வு மற்றும் சுற்றி நடக்க முடியும். அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது, ”என்றார்.


நோயாளி ஏழு நாட்கள் ஐ.சி.யுவில் இருந்தார். அவர் இப்போது ஆபத்தில் இல்லை எனவும் டாக்டர் டாஷ் கூறினார். "அவரது வயிற்றில் அறுவை சிகிச்சையின் போது நாங்கள் ஒரு உணவுக் குழாயை பொருத்தியிருந்தோம், அந்தக் குழாய் வழியாக அவருக்கு உணவு வழங்கப்படுகிறது. மிக விரைவில் அவருக்கு வாய்வழியாக உணவு கொடுக்க ஆரம்பிப்போம். அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது, ” என மருத்துவர் மேலும் கூறினார்.