முதுமையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் முதுமையின் அறிகுறிகளான முக சுருக்கங்கள், பலவீனம், முடி உதிர்தல் போன்ற பல விஷயங்கள் காலத்திற்கு முன் தோன்றுவதை கண்டிப்பாக தடுக்கலாம். இன்றைய காலத்தில் பலர் முதுமையின் அறிகுறிகளை மிக இளம் வயதிலேயே சந்திக்கின்றனர். முடி நரைத்தல், முடி உதிர்தல் மற்றும் வழுக்கை, தோல் தொய்வு, பலவீனம், சோர்வு, இரத்த சோகை மற்றும் பற்கள் பலவீனமடைதல் போன்றவை நீங்கள் முதுமையின் பாதையில் இருப்பதைக் குறிக்கும் அறிகுறிகளாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளமை விலகாமல் இருக்க உதவும் உணவுகள்


நிச்சயமாக வருடங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் இளமையாகவும் அழகாகவும் இருக்க விரும்புகிறார்கள். ஆனால், இளமையாக இருக்க என்ன வழிகள், இளமையாக இருக்க என்ன சாப்பிட வேண்டும் அல்லது இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்கள் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஊட்டம் கிடைக்கும் போதுதான் நீங்கள் இளமையாகவும் அழகாகவும் இருப்பீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். 


புரதம்


சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், தசைகளின் டோனை பராமரிக்கவும், புரதம் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். விலங்கு புரதங்கள் தரமான புரதத்தின் சிறந்த ஆதாரங்கள். கொலாஜன் உற்பத்திக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் அவற்றில் உள்ளன. புரோட்டீன் சருமத்திற்கு கட்டமைப்பைக் கொடுக்கவும் அதன் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது. இது தவிர, விலங்கு புரத மூலங்களில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது  சரும செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


ஆர்கன் இறைச்சி


விலங்குகளின் உறுப்புகளை சிலர் இறைச்சியாக உண்கின்றனர். இந்த இறைச்சிகள் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை பயக்கின்றன. உறுப்பு இறைச்சிகள் அல்லது ஆர்கன் இறைச்சி என்பவை விலங்குகளின் உறுப்பு இறைச்சிகளை குறிக்கின்றன. நாம் ஆடு, மாடு போன்ற விலங்கு இறைச்சிகளில் சில தனித்துவமான உடல் பாகங்களை இறைச்சியாக உண்கிறோம். ஆர்கன் இறைச்சி ஊட்டச்சத்தின் புதையல் ஆகும். சருமத்தை இளமையாக வைத்திருக்க தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அவற்றில் காணப்படுகின்றன. குறிப்பாக கல்லீரல் இறைச்சி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆற்றல் மையமாகும். இது வைட்டமின் ஏ சத்தின் நல்ல மூலமாகும், இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க அவசியம். வைட்டமின் ஏ சருமத்தின் இயற்கையான மாய்ஸ்சரைசரான செபம் உற்பத்திக்கு உதவுகிறது.


மேலும் படிக்க | இந்த பானங்களை காலையில் குடிச்சா போதும்: வேகமா எடையை குறைக்கலாம்


ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்பு


நிறைவுற்ற கொழுப்புகள் பெரும்பாலும் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன, ஆனால் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்புகள் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவசியம். நீங்கள் இளமையாக இருக்க இவை உதவும். நெய், வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது தேவையான கொழுப்பு அமிலங்களை உங்களுக்கு வழங்குகிறது. இது சருமத்த்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. நீரேற்றமாக இருப்பது சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், சருமத்தின் உண்டாகும் கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கவும் உதவுகிறது.


கொலாஜன் நிறைந்த உணவுகள்


கொலாஜன் என்பது உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை பராமரிக்கும் புரதமாகும். நாம் வயதாகும்போது, ​​​​கொலாஜன் உற்பத்தி இயற்கையாகவே குறைகிறது., இதனால் தோல் தளர்வாகி, சுருக்கங்கள் தோன்றும். உங்கள் உணவில் எலும்பு குழம்பு போன்ற கொலாஜன் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது சுருக்கங்களை போக்கி இளமையாக இருக்க உதவும். கொலாஜன் சருமத்தை மேம்படுத்தவும், ஈரபத்தை தக்க வைக்கவும், சுருக்கங்களை குறைக்கவும், தோல் நெகிழ்ச்சியை அதிகரிக்கவும் முடியும்.


ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு உணவுகள்


சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவது முக்கியம், இவை இரண்டும் முதுமை வருவதை துரிதப்படுத்தும். பெர்ரி மற்றும் மஞ்சள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளில் ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி வீக்கத்தைக் குறைக்கும் சக்திவாய்ந்த ஊட்டசத்து கலவைகள் உள்ளன.


(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)


மேலும் படிக்க | உயர் ரத்த அழுத்தத்தில் 4 வகை: அதனை எவ்வாறு தடுக்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ