1871ஆம் ஆண்டு ஜாப்பனீஸ் என் செபாலிடிஸ் - ஜேஇவி என்றழைக்கப்படும் ஜப்பானிய வைரஸ் ஜப்பானில் முதன்முறையாகப் பரவியது. கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரப்பப்படும் இந்த ஜப்பானிய வைரஸ் ஜப்பானிய மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும், அது மனித குலத்தையே அழிக்கும் சக்தி கொண்டது. பெரும்பாலும் இந்த கியூலெக்ஸ் வகை கொசுக்கள் வயல்வெளிகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அப்போது வயல்வெளிகளில் உள்ள புழு,பூச்சிகளை தின்று, பறவை மற்றும் பன்றிகளை கடிப்பதன் மூலமாக கொசுக்களின் உடலில் உள்ள ரத்த வைரசின் வீரியத்தை அது அதிகரித்துக் கொள்ளும். அப்படியாக இந்த கியூலெக்ஸ் வகை கொசுக்கள் மனிதனை கடிக்கும் போது, வைரஸ்கள் மனிதனுக்கு தொற்றி ஜப்பானிய மூளைக்காய்ச்சலை உண்டாக்கும். 



பெரும்பாலும், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக இந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம். உலக அளவில் வருடத்துக்கு 65,000க்கும் மேற்பட்டோர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் 25 சதவிகிதம் பேருக்கு மேல் உயிரிக்கும் அபாயம் ஏற்படும். காய்ச்சலில் இருந்து தப்பித்தாலும் மன அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் பாதிக்கப்படும்.


மனித உடலுக்குள் சென்ற 5முதல் 15 நாட்களில் இந்த வைரஸ் தன் அறிகுறிகளைக் காட்ட தொடங்கிவிடும். தலைவலி, காய்ச்சல், கழுத்துத் தசை இறுக்கம், வாந்தி ஆகியவை இந்தக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் ஆகும். அடுத்த கட்டமாக மனஅழுத்தம், படபடப்பு, உடல் சோர்வு, கைகால் மூட்டுவலி போன்றவை ஏற்படும். தொடர்ந்து கவனிக்காமல் விடும்போது பக்கவாதம் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டு உயிரிழக்க நேரிடும்.



இத்தகைய ஜப்பானிய மூளைக் காய்ச்சல் வைரஸை முற்றிலுமாக அழிக்க இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தொடர் சிகிச்சையின் காரணமாக உயிர் பிழைக்க வாய்ப்புகள் உண்டு. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர். ரத்தத்தில் உள்ள சீரம் அளவு, மூளை திரவம் ஆகியவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். மேலும், மருந்துகள், வலிநிவாரணி மாத்திரைகள், திரவ உணவுகள் அளிக்கப்பட்டுக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டுவர முடியும். மேலும், ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட எஸ் ஏ14 மற்றும் எஸ் ஏ14-2 உள்ளிட்ட நான்கு வகைத் தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.  



இப்படியாக உலகையே மிரட்டும் ஜப்பானிய மூளை காய்ச்சல் இந்தியாவையும் விட்டுவைத்ததில்லை. இந்தியாவில் பீகார், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய கொடிய வைரசின் தாக்கம் அதிகம். தற்போது, அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மழை வெள்ளத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் இந்த ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு உயிரிழந்து உள்ளனர். இவர்களில் கடந்த இரு தினங்களில் வெள்ளம் பாதித்த மோரிகாவன் மற்றும் நல்பாரி ஆகிய 2 மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், இதுதவிர, 16 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க | கருத்தரிப்பு தாமதத்துக்கான 5 முக்கிய காரணங்கள்


இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுப்படி அனைத்து அசாமின் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வைரஸ் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர் ஆகியோர் வயல் வரப்புகள், கொசுப் பெருக்கம் உள்ள நீர் நிலைகளுக்கு அருகில் போகாமல் இருப்பது நல்லது என எச்சரிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் குறையும் வேலையில் ஜப்பானிய வைரஸ் தொற்றின் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | இந்தியாவில் மங்கி பாக்ஸ்: அறிகுறிகள் என்ன? இதற்கு சிகிச்சை உள்ளதா? விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ