Kidney Problem Symptoms: நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் சரியாக செயல்பட வேண்டியது அவசியம். அப்போது தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, நமது சிறுநீரகங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் ஆனது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்து கொள்கிறது மற்றும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. சில காரணங்களால் நமது சிறுநீரகம் செயலிழக்கலாம். அப்போது உடலில் நச்சுத்தன்மை அதிகமாகி, டயாலிசிஸ்க்கு வழிவகுக்கிறது. எனவே சிறுநீரக ஆரோக்கியம் மிகவும் முக்கியம். சிறுநீரகம் தொடர்பான நோய்களை சில அறிகுகள் வைத்து கண்டுபிடிக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சர்க்கரை நோய் பாடாய் படுத்துகிறதா? இந்தப் பச்சைப் பழம், இலை சாப்பிட்டால் போதும்


சிறுநீரக நோயின் அறிகுறிகள்


சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முதலில் தோலில் அரிப்பு, வறட்சி, தோலில் விரிசல் மற்றும் செதில்கள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும் தோலின் நிறம் வெண்மையாக மாறத் தொடங்கும். அதனை தொடர்ந்து அரிப்பு தோன்ற ஆரம்பிக்கும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் உடலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, நகங்கள் பலவீனமாகவும் வெண்மையாகவும் மாறத் தொடங்கும். மேலும், கை, கால்களில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு வயிற்று வலி மற்றும் முதுகுவலி தொடர்ந்து இருக்கும். சிறுநீரகம் தொடர்பான நோய் ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும்போது எரியும் உணர்வை ஏற்படுத்தலாம்.


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?


இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும்: இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இனிப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்த்திருங்கள்.


தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்: உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாக செய்யும். எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.


பிபியைக் கட்டுப்படுத்தவும்: சிறுநீரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதனை கட்டுப்படுத்த உணவில் உப்பை கம்மியான அளவில் சேர்க்க வேண்டும். மேலும் டீ மற்றும் காபி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதே போல சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உடல் செயல்பாடுகள் மிகவும் அவசியம். தற்போது பலருக்கும் உடல் செயல்பாடு மிகவும் குறைந்துள்ளது. எனவே சிறுநீரகக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்க தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ