சிறுநீரக கல் நோயாளிகள்... தவிர்க்க வேண்டிய சில உணவுகள்... கவனமாக இருங்க
சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
இன்றைய அவசர வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை உடலை நோய்களின் கூடாரமாக்கி விடுகிறது. இவற்றில் சிறுநீரக கல் பிரச்சனையும் ஒன்று. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது என்பது கவலைக்குரிய விஷயம்.
சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
சிறுநீரகம் மனித உடலின் பில்டர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது உடலில் உள்ள அழுக்கு மற்றும் நச்சுக்களை சிறிநீர் மூலம் வெளியேற்றுகிறது. இதன் மூலம் பல விதமான நோய்களின் அபாயம் குறைகிறது. எனவே இதனை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம்
சிறுநீரக கற்கள் எனப்படும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீர் தொற்று மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, கற்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும் நோயாளிகள் எந்தெந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இதற்காக ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸிடம் பேசுகையில், அவர் கூறிய தகவல்கள் (Health Tips) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, பழங்களை ஆரோக்கியத்தின் பொக்கிஷமாக கருதுகிறோம், இது பெரிய அளவில் உண்மை, ஆனால் ஒவ்வொரு பழமும் எல்லா நோய்களுக்கும் ஏற்றது என்று அவசியமில்லை. சிறுநீரக கல் நோயாளிகள் சில பழங்களை தவிர்க்க வேண்டும். அதே சமயம் சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
சிறுநீரக கல் நோய்காளுக்கு ஏற்ற பழங்கள்
1. அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் சிறுநீரக கல் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தர்பூசணி போன்ற நீர் சத்து அதிகமுள்ள பழங்கள் உதவியாக இருக்கும்.
2. சிறுநீரக கல் நோயாளிகள், சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும், ஏனெனில் இது சிறுநீரக பிரச்சனைகளை நீக்குவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதற்கு நீங்கள் ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை மற்றும் திராட்சைகளை அதிகமாக சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் பிரச்சனைகளை நீக்குவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய 5 பழங்கள்
சிறுநீரக கற்கள் பிரச்சனை இருக்கும் போது, சில பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றை சாப்பிட்டால் கற்கள் பிரச்சனை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும். அவை;
1. மாதுளை
2. கொய்யா
3. உலர் பழங்கள்
4. ஸ்ட்ராபெரி
5. புளுபெர்ரி
மேலும் படிக்க | நெய் vs ஆலிவ் எண்ணெய்... இரண்டில் எது பெஸ்ட்.... நிபுணர் கூறுவது என்ன
சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்
1. அதிக உப்பு உள்ள உணவுகள் சிறுநீரக கற்கள் பிரச்சனையை அதிகரிக்கும். ஆகையால், சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் சிப்ஸ், ஊறுகாய், நொறுக்குத் தீனி, பீட்சா, பர்கர் போன்றவற்றை உண்ணக்கூடாது.
கீரை ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய அற்புத உணவு. ஆனால் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் ஆக்சலேட்டாக மாறி சிறுநீரக கற்களை உண்டாக்கும். ஆகையால், சுறுநீரக கற்கள் உள்ளவர்கள் கீரையை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
3. அசைவ உணவுகளான இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றில் அதிக அளவில் புரதம் உள்ளது. விலங்கு புரதம் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும். இவற்றை அளவிற்கு அதிகமாக உண்பதால், சிறுநீரக கல் பிரச்சனை அதிகரிக்கும்.
4. குளிர்பானங்கள்: குளிர்பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் இருப்பதால் , சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் குளிர்பானங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது பிரச்சனையை அதிகமாக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குடல் பிரச்சனை தீர்வு! இந்த 3 உணவுகள் சாபிட்டால் மலச்சிக்கல், வாயு இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ