இன்றைய காலகட்டத்தில், மின்சாரம் மற்றும் மொபைல் ஆகியவை வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். இன்று கிட்டத்தட்ட அனைவரும் மின்சாரம் மற்றும் மொபைலைப் பயன்படுத்துகிறார்கள். மொபைல் மற்றும் மின்சாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம் என்ற நிலை உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் பிரிட்டனில் (Britain) வாழும் ஒருவருக்கு மின்சாரம் மற்றும் மொபைல் என்றாலே அலர்ஜியாம். 48 வயதான இவர் மின்சாரம் மற்றும் மொபைல் கதிர்வீச்சு அலர்ஜி உள்ளது. மின் உபகரணங்கள் இயங்கும் அல்லது மொபைல் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடத்தில் இவர் வாழ்வது மிகவும் கடினம்.


அனைவரும் மின்சாரம் மொபைலுக்கு அடிமையாக உள்ள இந்த காலகட்டத்தில், உலகில் ஒருவருக்கு மின்சாரம் மற்றும் மொபைல் என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. 


மின்சாரம், மொபைல் கதிர்வோச்சு அல்ர்ஜி உள்ள இந்த நபரின் பெயர் புருனோ பாரிக். புருனோ நார்த் ஹைம்ப்டன்ஷையரில் உள்ள  ரோத்வெல்லில் வசிக்கிறார். இந்த ஒவ்வாமை காரணமாக புருனோ ஒரு கைதியைப் போல வீட்டிலேயே இருக்கிறார். புருனோ நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்தார். இப்போது புருனோவிற்கு, இந்த நான்கு ஆண்டுகளில்,  எடை 31 கிலோவாக குறைந்துள்ளது.


புருனோ எலக்ட்ரோ மேக்னடிக் ஹைபர்சென்சிட்டிவிட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது எலக்ட்ரோசென்சிடிவிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் எலக்ட்ரோபோபியா என்றும் அழைக்கப்படுகிறது.


ALSO READ | தண்ணீரில் கண்டம் என கணித்த டாக்டர்கள்.... தவிக்கும் இளம் பெண்..!!!


புருனோ பில்டர் மற்றும் கிரேஹவுண்ட் நாய் பயிற்சியாளராக இருந்து வருகிறார். புருனோ தனது மனைவி லிசா மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார். புருனோவின் குடும்ப உறுப்பினர்கள் மின்சார சாதனங்களை குறைவாகவே பயன்படுத்துகின்றனர். இங்கிலாந்தில் 4 சதவீத மக்கள் எலக்ட்ரோசென்சிட்டிவிட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


அலர்ஜி அபாயத்தை குறைக்க புருனோ வீட்டிற்கு வெளியே தனக்கென் ஒரு அவுட்ஹவுஸை கட்டி வருகிறார். இந்த அவுட் ஹவுஸில் புருனோ தனியாக இருப்பார். வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப்படும்போது அவர் இங்கே தங்குகிறார்.


ALSO READ | ஆப்பிரிக்க நாடான சேனேகலில் மீனவர்களிடையே பரவும் மர்ம நோய்... பீதியில் மக்கள்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR