கொய்யா பழம் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. அதை சாப்பிடுவதால், பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை கொய்யா பழம் (Guava Fruit) நமக்கு அளிக்கின்றது. இது வாந்தியைத் தடுப்பதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதய நோய்களிலிருந்தும் கொய்யா பழம் நம்மை பாதுகாக்கிறது. இது இந்தியாவில் எளிதாகக் கிடைக்கக்கூடும் ஒரு பழமாகும். இதன் பண்டைய சமஸ்கிருத பெயர் அம்ரித், அதாவது அமிர்தம் (அமுதம் போன்ற) போன்ற பழம். பனாரஸில் இதை அனைவரும் அமிர்தம் என்றுதான் அழைக்கிறார்கள்.


பழம் மட்டும் அல்ல இலையும் அமுதமே!!


கொய்யாவைப் போலவே, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளவை. கொய்யாவின் இலைகள் (Guava leaves), ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் வல்லமைக் கொண்டவை.


கொய்யா இலைகளின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்:


கொய்யா இலைகள் வயிற்று வலி மற்றும் வாந்தியில் நிவாரணம் அளிக்கின்றன


கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அவற்றை கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பதால் வயிற்று வலி நீங்கும். வாந்தி சங்கடமும் சரியாகும். இதற்கு, நீங்கள் கொய்யாவின் 5-6 இலைகளை 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் அதை வடிகட்டி அதன் தண்ணீரை குடிக்க வேண்டும்.


மூட்டு வலி நீங்கும்


மூட்டு வலிக்கும் கொய்யா இலைகள் நன்மை பயக்கும். கொய்யா இலைகளை அரைத்து, விழுதாக்கி அதை மூட்டுகளில் தடவ வேண்டும். இதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.


ALSO READ: பல நன்மைகள் கொண்ட Aloe Vera-வில் பல Side effects-சும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா


நீரிழிவு நோய்க்கு கொய்யா இலை நல்ல மருந்து


கொய்யா இலைகளின் நீர், நீரிழிவு நோய்க்கு (Diabetes) நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது தவிர, உடலில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதையும் இது தடுக்கிறது. இதன் மூலம் எடையைக் குறைக்கவும் இது உதவுகிறது.


பல் வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது


கொய்யா இலைகளின் நீர் பல்வலி, ஈறு அழற்சி மற்றும் வாய் புண் ஆகியவற்றைப் போக்க உதவுகிறது. கொய்யா இலைகளை வேகவைத்து, அவற்றை தண்ணீரில் கலந்தது, வடிகட்டி அதை ஈறு மற்றும் பல்லில் படும்படி சிறிது நேரம் வைத்திருக்கலாம். இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, அந்த நீரால் வாய் கொப்பளித்தாலும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


குறிப்பு: இந்த அறிவுரை உங்களுக்கு பொதுவான தகவல்களை வழங்க மட்டுமே கொடுக்கப்படுகிறது. எதையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது நிபுணரை அணுக வேண்டும்.


ALSO READ: தயிரை எப்படி சாப்பிட்டால் நோய் தூர விலகி ஓடும்? தெரிந்துக் கொள்ளுங்கள்...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR