தயிரை எப்படி சாப்பிட்டால் நோய் தூர விலகி ஓடும்? தெரிந்துக் கொள்ளுங்கள்...

நோயில்லா வாழ்வு வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? அதற்கு ஒரு சுலபமான எளிய வழி தயிர். சில உணவுப் பொருட்களை தயிரில் கலந்து சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும். எனவே தயிர்சாதம் என்று யாராவது உங்களை கேலி செய்தால், காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2020, 09:54 PM IST
தயிரை எப்படி சாப்பிட்டால் நோய் தூர விலகி ஓடும்? தெரிந்துக் கொள்ளுங்கள்... title=

புதுடெல்லி: தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதில் எதை எந்த விதத்தில் கலந்து சாப்பிடுவது நோய்களை தூரவிரட்டும் என்பது தெரியுமா?  பொதுவாகவே அனைவரும் தினசரி தயிர் சாப்பிடுகின்றனர். தயிர் (curd) பலவிதமான சத்துக்களை கொண்டது. கால்சியம் (calcium), புரோட்டீன் (protien), வைட்டமின்(vitamin) என பல்வேறு சத்துக்களைக் கொண்ட தயிர் ஒரு சஞ்சீவனி மருந்து என்றே கூறலாம்.

தயிரின் அம்மாவான பாலை விட தயிர் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். இதுதான் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி பாய்வது என்று சொல்வதோ? தயிரில் சர்க்கரை அல்லது உப்பு கலந்து சாப்பிடும் வழக்கத்தை பலர் பழக்கமாக வைத்திருப்பார்கள். தயிருடன் வேறு எதை கலந்து சாப்பிடலாம்?  

உலர் பழங்கள் (Dry Fruits)
உடல் மெலிந்தவர்கள், எடையை அதிகரிக்க விரும்பினால், தினசரி ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை மற்றும் உலர் பழங்களை கலந்து சாப்பிட வேண்டும். இது எடையை அதிகரிப்பதுடன், சோர்வு மற்றும் பலவீனத்தை சமாளிக்க உதவும்.

சோம்பு
இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுபவரா நீங்கள்? ஒரு கிண்ணம் தயிரில் 1/2 தேக்கரண்டி சோம்பை கலந்து சாப்பிடுங்கள். இதை கடைபிடித்தால் போதும், ஆழ்ந்த தூக்கமும் வரும், அதோடு கூடுதல் நன்மையாக வாயு பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

வறுத்த சீரகம் மற்றும் கருப்பு உப்பு
செரிமான பிரச்சினைகள் இருப்பவர்கள், ஒரு கிண்ணம் தயிரில் கருப்பு உப்பு மற்றும் 2-3 சிட்டிகை வறுத்த சீரகத்தை கலந்து சாப்பிட வேண்டும். இந்த கலவையானது பசியை அதிகரிக்கவும், செரிமானத்தை வலுப்படுத்தவும் உதவும்.

வாழைப்பழம்
வைட்டமின்கள், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் இருக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், தயிரில், வாழைப்பழத்தைக் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைக் கொடுக்கும். அதோடு, ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.  

ஆரோக்கியமான செய்தி இது | கல்லீரலைக் கெடுக்கும் உணவுகளும், அவற்றின் பாதிப்புகளும் என்ன தெரியுமா

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News