உடல் எடைக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான போர் முடிவில்லாமல் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான வழியாக வந்திருக்கும் உணவு முறை இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் உணவில் இருந்து இறைச்சியை நீக்காமல் ஆரோக்கியமான உணவை உண்ணும் வழி எப்படி என்று தெரியவில்லையா? சாப்பிடுவதில் கட்டுப்படுத்தாத ஆனால் ஆரோக்கியமான மற்றும் நெகிழ்வான உணவுமுறை ஒன்று இருக்கிறது. 


உடல் ஆரோக்கியம் தொடர்பான கவலை பலருக்கும் இருக்கிறது. அதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு என இன்று அனைவரும் மெனக்கெடுகின்றனர். அதிகரிக்கும் உடல் எடையால் பலரும் உணவில் கட்டுபாட்டை கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது.


ஆனால், என்ன செய்தாலும் உடல் பருமன் குறையவில்லை என்று இறைச்சியை தவிர்த்து உண்ணலாம் என்ற கட்டாயத்திற்கு உட்பட்டாலும், நாவின் ருசியை கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது.


மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும்
  
ஆரோக்கியமானதாகக் கருதப்படும் உணவுகளில் பல சைவ உணவுகளாகவே இருக்கிறது. வாய்க்கு ருசியாகவும் இருக்க வேண்டும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்றால் உங்கள் உணவு  நெகிழ்வானதாக, ஃப்லெக்ஸிடேரியன் (Flexitarian) உணவாக இருக்கலாம்.


Flexitarian டயட் என்றால் என்ன?
"ஃப்லெக்ஸிடேரியன்" என்பது "ஃப்லெக்ஸிபிள்" மற்றும் "வெஜிடேரியன்" ( Flexitarian = "flexible" and "vegetarian") என்ற சொற்களின் கலவையாகும். சைவ உணவின் ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்காக  உங்கள் உணவில் இருந்து இறைச்சியை முழுமையாக நீக்க வேண்டியதில்லை.


நீங்கள் வழக்கமாக சைவ உணவு உண்பவராக இருக்கலாம், ஆனால் விருப்பம் ஏற்படும்போது மட்டும் அசைவ உணவை சாப்பிடுங்கள். ஃப்லெக்ஸிடேரியன் உணவைப் பின்பற்றுபவர்களின் உடல் பருமன் குறைவதோடு, அவர்களின் பொது ஆரோக்கியமும் மேம்படுகிறது.


அதுமட்டுமல்லாமல், இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயமும் குறைகிறது. அதோடு, இறைச்சியை குறைவாக சாப்பிடுவதால் நீண்ட காலம் வாழலாம் என்றும் கூறப்படுகிறது.



எளிமையான சொற்களில் சொல்வதென்றால், தாவர அடிப்படையிலான உணவுகள் அதிகமாகவும், இறைச்சிகள் மற்றும் பிற விலங்கு சார்ந்த தயாரிப்புகளை குறைவாகவும் கொண்ட டயட் ஃப்லெக்ஸிடேரியன். 


இந்த உணவு முறையின் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் எதை உட்கொள்ளலாம் என்பதில் கட்டுப்பாடுகளை விதிக்காமல், பலவகையான உணவுகளை இது ஊக்குவிக்கிறது. 


பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் உங்கள் உணவில் அதிகமாக இடம்பெற வேண்டும்


விலங்கு அடிப்படையிலான புரதத்தை விட தாவர அடிப்படையிலான புரதத்தில் கவனம் செலுத்த வேண்டும்
அவ்வப்போது அசைவ உணவுகளை சாப்பிடலாம்
முடிந்தவரை இயற்கையான உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்


மேலும் படிக்க | இந்த 5 பொருட்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் உள்ளது


உங்கள் உணவில் சேர்க்கப்பட்ட இனிப்புகள் அல்லது சர்க்கரை மற்றும் வேகவைத்த பொருட்கள் குறைந்தபட்ச அளவில் வைக்கப்பட வேண்டும்


எந்தவொரு உணவுக் குழுக்களையும் நீக்குவதற்குப் பதிலாக, ஒரு நெகிழ்வானவராக மாறுவது உங்கள் உணவில் ஐந்து உணவுக் குழுக்களைச் சேர்ப்பதை உள்ளடக்குகிறது.


"புதிய இறைச்சி" (பீன்ஸ், பட்டாணி அல்லது முட்டை போன்ற இறைச்சி அல்லாத புரதங்கள்), பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பால் பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள் அவற்றில் அடங்கும்.



உங்கள் சொந்த உணவுத் தேவைகள், சுகாதார இலக்குகள் மற்றும் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப நீங்கள் அதை மாற்றியமைக்க முடியும் என்பதால், ஃப்லெக்ஸிடேரியன் உணவை உண்பது உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.  


ஃப்ளெக்சிடேரியன் உணவில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பதால் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் உணவு பொருட்களை வைத்த நமது உணவு அட்டவணையை திட்டமிடலாம். 


 அனைத்து உணவுக் குழுக்களையும் உள்ளடக்கியிருப்பதால், ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம். 


மேலும் படிக்க | கொலஸ்ட்ரலை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்


பொதுவாக, சைவ உணவுகளில், வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து சமநிலையை வழங்கக்கூடிய மீன் அல்லது பிற மாற்றுகளை உட்கொள்ளலாம் என்பதால் ஃப்ளெக்சிடேரியன் உணவு அசைவ பிரியர்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.


இந்த வகை டயட்டில் விலையுயர்ந்த உணவு மாற்றீடுகள் அல்லது சிறப்பு சமையல் குறிப்புகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கும் உணவை =தேர்ந்தெடுக்கலாம்.


ஃப்ளெக்சிடேரியன் உணவை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருக்கும் தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு ஆதரவாக, ஃப்ளெக்சிடேரியன் பிரியர்கள் அதிக கலோரி கொண்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பதே இதற்குக் காரணம்.


மேலும் படிக்க | கோடையில் திராட்சை அளிக்கும் அற்புத நன்மைகள்: பல வித நோய்களுக்கு ஒரே நிவாரணம் 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR