வெந்தயத்தை ‘இப்படி’ சாப்பிடுங்க... பருமன் குறைய நாங்க கியாரண்டி!
Fenugreek Seeds for Weight Loss: வெந்தயத்தில் கணிசமான அளவு நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிட்கள், ஒலிக் அமிலம், லினோலெனிக் அமிலம், லினோலிக் அமிலம், கோலின், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, நிகோடினிக் அமிலம், நியாசின் ஆகியவை காணப்படுகின்றன.
எடை இழப்புக்கு வெந்தயத்தை சாப்பிடும் முறை: இந்தியாவில் சமையலறைகளில் பல்வேறு மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை நிச்சயம் காணலாம், அவை சுவையை மேம்படுத்துவதை விட எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகின்றன. சமையலில் தினமும் பயன்படுத்தப்படும் மசாவான வெந்தயம் அதில் மிக முக்கியமானது. இது உங்கள் சமையலுக்கு தனித்துவமான நறுமணத் தருகின்றன. இது பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, அவை பல வழிகளில் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், குறிப்பாக எடை இழப்புக்கு நீங்கள் வெந்தயத்தை சாப்பிட திட்டமிட்டால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எடை இழப்பு உணவில் எவ்வாறு சேர்க்கலாம் என்பதை ஆராய்வோம்.
வெந்தயத்தில் கணிசமான அளவு நார்ச்சத்து, பாஸ்போலிப்பிட்கள், கிளைகோலிப்பிட்கள், ஒலிக் அமிலம், லினோலெனிக் அமிலம், லினோலிக் அமிலம், கோலின், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, நிகோடினிக் அமிலம், நியாசின் ஆகியவை காணப்படுகின்றன.
1. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, உடலில் அதிகப்படியான கலோரிகளை எரித்து, மலசிக்கல் வராமல் தடுக்கிறது.
2. வைட்டமின்-சி உள்ளடக்கம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை மேலும் வெளியேற்றி, நச்சுத்தன்மையை நீக்க உதவும்.
3. வெந்தயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
4. வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்கவும் உதவும்.
5. உணவு நார்ச்சத்து கொழுப்பு உடலில் சேருவதைக் குறைக்கின்றன குறைக்கின்றன.
மேலும் படிக்க | ’இந்த’ பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக மது அருந்தக்கூடாது! தவறினால் மரண ஆபத்து அதிகம்
எடை இழப்புக்கு வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்துவது? உங்கள் இந்திய எடை இழப்பு உணவில் வெந்தயத்தை சேர்க்க 5 வழிகள்:
1. உடல் எடையைக் குறைக்க வெந்தய நீர்: அதிகாலையில் உடலின் நச்சுக்களை நீக்கும் தண்ணீரைக் குடிப்பது பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சிறந்த முறையாகும். தாமிர பாத்திரத்தில் இரவு முழுவதும் தண்ணீரை வைத்துவிட்டு மறுநாள் காலையில் குடிப்பதைப் பார்த்திருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் வெந்தய விதைகளை அதே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை குடிக்கவும். ஆனால், தாமிர பாத்திரத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
2. எடை இழப்புக்கான வெந்தய டீ: ஒரு கப் டீ, காபி இல்லாமல் நாளைத் தொடங்குவதை நினைத்துப் பார்க்க முடியாதவர்கள், வழக்கமான தேநீருக்குப் பதிலாக இந்த மூலிகை தேநீரை முயற்சிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து அதை பாதியாக குறைக்கவும். டீயை வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து, கலந்து, ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
3. எடை இழப்புக்கு வறுத்த வெந்தயம்: நீங்கள் சிறிது வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, அதனை தயிர் பச்சடி, ராய்தா, சாலட் மற்றும் பலவற்றில் அழகுபடுத்தும் பொருளாக சேர்க்கலாம்.
4. எடை இழப்புக்கான வெந்தய தாளிப்பு: இது உங்கள் இந்திய உணவில் வெந்தயத்தை சேர்க்க மிகவும் பொதுவான வழி. நெய் அல்லது நல்லெண்ணெயில் வெந்தயத்தை தாளித்து, உங்கள் பருப்பு, சாம்பார், காய்கறிகள் மற்றும் பலவற்றில் சேர்க்கவும். இது உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்களை சேர்க்கிறது.
5. எடை இழப்புக்கு முளை கட்டிய வெந்தயம்: முளை கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் ஸ்ப்ரவுட் கலவையில் ஒரு தனித்துவமான கூடுதல் உணவாக இருக்கும். நீங்கள் இப்போது சிறிது முளை கட்டிய வெந்தயத்தை உங்கள் வழக்கமான கலவையில் சேர்க்கலாம். முளை கட்டிய வெந்தயத்தின் மூலம் கிடைக்கும் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இரட்டிப்பாகிறது. நீங்கள் செய்ய வேண்டியது, வெந்தயத்தை கழுவி, ஈரமான துணியில் மூடி, இரண்டு அல்லது மூன்று இரவுகள் வைத்திருந்தால், முளை விட்டிருக்கும்.
எடை இழப்பிற்கு வெந்தயம்: தினமும் மேத்தி விதைகளை எடுத்துக்கொள்வது சரியா? இது ஏதேனும் பக்க விளைவு உள்ளதா?
உணவுத்துறை நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், சரியான அளவு உட்கொண்டால், மெத்தி விதைகள் பொதுவாக பாதுகாப்பானது என்று அங்கீகரிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது. அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, வயிறு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட சில பொதுவான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, எடை குறைப்பு உணவுக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவை வரையறுக்கும் முன் ஒரு நிபுணரை அணுகி ஆலோசனை சிறந்த நடைமுறையாகும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பெண்களைவிட ஆண்களுக்கு கருவுறுதல் தன்மை அதிக வயதுக்கு இருக்கும்! இது உண்மையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ