முகச்சுருக்கம் முற்றிலும் நீங்கி பொலிவு பெற... சூப்பரான சில வீட்டு வைத்தியங்கள்!
சருமத்தில் தோன்றும் சுருக்கங்களை ஒழித்துக் கட்டி பளபளப்பைப் பெற, வீட்டிலேயே சீரம் தயார் செய்யலாம். சீரம் தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்வோம்.
வீட்டில் தயாரிக்கப்படும் சீரம்: மோசமான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மாசுபாடு, தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் சருமம் சிறு வயதிலேயே முதுமை தோற்றத்தை கொடுக்கும் நிலையில் காணப்படுகிறது. சொல்லப்போனால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பல வகையான சீரம்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், சிலருக்கு இதில் உள்ள ரசாயனங்கள் சரும பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், சந்தையில் சீரம் வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே இயற்கையான சீரம் தயாரிக்கலாம். இது சருமத்திற்கு இயற்கையான பொலிவைத் தரும்.
தேன் மற்றும் எலுமிச்சை சீரம் தயாரிக்கும் முறை
தேன் மற்றும் எலுமிச்சையிலிருந்து சீரம் தயாரிக்க, முதலில் 1 கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். அதன் பிறகு உங்கள் முகத்தில் நன்றாக தடவவும். இப்போது சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை சுத்தம் செய்யவும். இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும். இத்துடன் மந்தமான சரும பிரச்சனைகளும் நீங்கும்.
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் சீரம்
உங்கள் சருமம் பளபளப்பு ஏதும் இன்றி டல்லாகஇருந்தால், இந்த முக சீரம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். இந்த ஃபேஸ் சீரம் தயாரிக்க, முதலில் ஒரு கிண்ணத்தை எடுக்கவும். இப்போது அதில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 சிட்டிகை மஞ்சள் தூள் கலக்கவும். இதற்குப் பிறகு, இந்த சீரம் உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக சுத்தம் செய்யவும்.
வீட்டில் தயாரிக்கும் கற்றாழை சீரம்
கற்றாழை சீரம் தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் வைட்டமின்-இ கேப்ஸ்யூல் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் கிளிசரின் கலந்து, பின்னர் இந்த திரவத்தை சுத்தமான கொள்கலனில் சேமிக்கவும். இப்போது நீங்கள் உங்கள் தோலில் இந்த சீரம் பயன்படுத்தலாம்.
தேன் மற்றும் இலவங்கப்பட்டை சீரம்
முகப்பரு போன்ற பொதுவான பிரச்சனைகளை நீக்க தேன் மற்றும் இலவங்கப்பட்டை சீரம் பயன்படுத்தலாம். இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உங்கள் சருமத்தை மென்மையாக மாற்றும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை சீரம் தயாரிக்க, முதலில் 1 கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் கலக்கவும். அதன் பிறகு உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, சாதாரண நீரில் தோலை சுத்தம் செய்யவும்.
அலோ வேரா மற்றும் மஞ்சள் சீரம்
அலோ வேரா மற்றும் மஞ்சள் சீரம் எண்ணெய் சருமத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த சீரம் தயாரிக்க, முதலில் 1 புதிய கற்றாழை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து கற்றாழை ஜெல்லை வெளியே எடுக்கவும். இப்போது அதில் சுமார் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலக்கவும். அதன் பிறகு, அதை சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இப்போது இரவில் தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தில் மசாஜ் செய்து, சில நிமிடங்களுக்குப் பிறகு தோலைக் கழுவவும்.
மேலும் படிக்க | சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனையா? அப்போ இந்த காய்கறிகள் மட்டும் போதும்
முகத்தில் சீரம் தடவுவதன் நன்மைகள்
இயற்கையான முக சீரம் சருமத்தில் தடவுவதால் பல நன்மைகள் உள்ளன. இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும். மேலும், இது சருமத்தை சீர் செய்வதில் பயனுள்ளதாக இருக்கும். தினமும் இயற்கையான முக சீரம் பயன்படுத்தினால், முகப்பரு, பருக்கள், சுருக்கங்கள், எண்ணெய் பசை சருமம், மந்தமான சருமம் போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம். முகப்பருவும் நீங்கும்
சீரம் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
இயற்கையான முக சீரம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தை சேதப்படுத்தும் வாய்ப்புகள் மிகக் மிகக் குறைவு. இருப்பினும், இந்த சீரம்களில் உள்ள பொருட்களால் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அவற்றை உங்கள் முகத்தில் பயன்படுத்த வேண்டாம். அதே நேரத்தில், சந்தையில் கிடைக்கும் ரசாயண முக சீரம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டாம். இது உங்கள் சருமத்தை சேதப்படுத்தும்.
இயற்கையான முக சீரம் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். இருப்பினும், எந்தவொரு இயற்கை அல்லது சந்தைப் பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு, அதில் உள்ள பொருட்களைச் சரிபார்க்கவும், இதனால் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், இந்த சூழ்நிலையில் உங்கள் சருமத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கலாம்.
மேலும் படிக்க | தொப்பையை கரைக்கணுமா.. இந்த ‘7’ விதிகளை கடைபிடியுங்க.... அதுவே போதும்!
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.
மேலும் படிக்க | ஆர்வ கோளறுல வெந்நீர் அதிகம் குடிக்காதீங்க... கிட்னி காலியாகிவிடும்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ