பெரும்பாலானோர் குளிர் காலத்தில் இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்படுகின்றனர். சளி மற்றும் கபம் மார்பில் சேருவதால் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது. சில சமயங்களில் நெஞ்சு அதிக சளி இருப்பதன் காரணமாக மூச்சு விடுவது கடினமாகும். நீண்ட காலமாக நுரையீரலில் தொற்று இருந்தால் நிமோனியா ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் பல சமயங்களில் சளி மார்பில் சிக்கிக் கொள்ளும். உங்கள் மார்பில் சளி கபம் சேர்ந்து இருந்தால் கண்டிப்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத கஷாயத்தை குடியுங்கள். 3 - 4 நாட்களுக்குள் நிவாரணம் (Health Tips) கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கஷாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்


1. சுமார் 1 அங்குல இஞ்சித் துண்டு 


2. சுமார் 8 - 10 கருப்பு மிளகு


3. சுமார் 8 - 10 துளசி இலைகள்.


4. ஒரு பெரிய பிரிஞ்சி இலை.


5.  சுமார் 1 அங்குல பச்சை மஞ்சள் துண்டு.


6. 1 இலவங்கப்பட்டை.


7.  1 பெரிய துண்டு வெல்லம்.


8.  1 கிளாஸ் தண்ணீர்.


மேலும் படிக்க | அற்புத பலன் தரும் குளிர்காலக் கீரை! கடுகுக்கீரை கூட்டு சாப்பிட்டால் நோய்கள் ஓடிப்போகும்


கஷாயம் தயாரிக்கும் முறை


1. கஷாயம் தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.


2. இப்போது அதில் துளசி இலைகள், பிரிஞ்சி இலைகள், கருப்பு மிளகு மற்றும் பச்சை மஞ்சள் சேர்க்கவும்.


3. மேலும் தண்ணீரில், இலவங்கப்பட்டை, வெல்லம், இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.


4. தண்ணீர் பாதியாக வற்றி அதன் நிறம் மாறும் வரை நீங்கள் சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.


5. சுமார் அரை கிளாஸ் அளவிற்கு வற்றி  குறைந்த பின், ​​அதை ஒரு குவளையில் வடிகட்டி, சூடாக குடிக்கவும்.


6. இந்த கஷாயத்தை 3 - 4 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் சளி, இருமல் பிரச்சனை நீங்கும்.


கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


கஷாயம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் உடலை சூடாக வைத்திருக்கவும், சளியை கரைக்கவும் உதவுகின்றன. இதில் பச்சை மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது, இது சளியை தளர்த்தும். இஞ்சி சளியை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி - பாக்டீரியல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. கருப்பு மிளகு சாப்பிட்டால் சளி மற்றும் கபம் குறையும். இதன் காரணமாக நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி கரையும். அதே நேரத்தில், பிஞ்சி இலையும் உடலை சூடாக இருக்கும். இவை அனைத்தும் சேர்ந்து சளி வெளியேற உதவுகிறது.


முக்கிய குறிப்பு : கஷாயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும். அதோடு, கஷாயத்தையும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிகப்படியாக சேர்த்து கொண்டால் உணவு குழாயில் நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ