இரத்தத்தில் படிந்திருக்கும் கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு மெழுகு போன்ற ஒட்டும் பொருளாகும். ஆனால் உங்கள் சமையலறையில் உள்ள பல ஆயுர்வேத பொருட்கள் அதை எளிதாக அகற்றும். இவற்றை நீங்கள் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தால், 5 நாட்களில் உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேறிவிடும்.


கொலஸ்ட்ராலை கரைக்கும் உணவுகள்:


இஞ்சி: தினமும் 2 கிராம் இஞ்சியை உட்கொள்வதால் ட்ரைகிளிசரைடு மற்றும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இஞ்சியை உணவு தவிர வேறு பல பொருட்களுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். துத்தநாகம், இரும்பு, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் இஞ்சியில் உள்ளன. சளி, உடல்வலி, காய்ச்சல் போன்ற உடலின் பல பிரச்சனைகளை இஞ்சி சாறு நொடியில் குணப்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி-வைரல் பண்புகள், பருவகால நோய்கள் மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு விரைவான நிவாரணம் தருகிறது.


வெங்காயம்: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலில் அதிக புரதச்சத்து உள்ள லிப்போபுரோட்டீன்கள் அதிகரிக்கின்றன. இது நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கிறது. வெங்காயத்தில் கந்தகம் உள்ளது. இதன் காரணமாக இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை சுத்தப்படுத்துகிறது.


மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?


பீட்ரூட்: கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்த பீட்ரூட் எல்டிஎல் அதாவது கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். மேலும், எடை இழப்புக்கு உதவுவதுடன், இரத்த சோகையையும் போக்கும். முடி கொட்டுவதும் நின்றுவிடும்.


ஆப்பிள் வினிகர்: ஆப்பிள் சீ சைடர் வினிகர், நரம்புகளில் சேரும் கொழுப்பை கரைத்து, ரத்தத்தில் பாயும் கொழுப்பை நீக்கும்.1 கிளாஸ் தண்ணீரில்   2-3 ஸ்பூன்கள் அல்லது சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுவது  நல்ல பலன் கொடுக்கும். விரும்பினால், அதில் இலவங்கப்பட்டை பொடி மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். இது மேலும் திறம்பட செயல்படும்.


பூண்டு: பூண்டில் சல்பர் உள்ளது. இது போன்ற ஒரு சத்து, அதிக கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் நான்கு பல் பூண்டுகளை விழுங்கவும். அல்லது 6-8 பூண்டு பற்களை அரைத்து 50 மில்லி பால் மற்றும் 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.


வெந்தயம்: பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்த வெந்தயம், இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க வேலை செய்கிறது. மேலும், கல்லீரலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. இதற்கு ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடியை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் மென்று அதன் தண்ணீரையும் குடிக்கவும்.


கொத்தமல்லி விதைகள்:  கொத்தமல்லி இரத்தச் சர்க்கரையை குறைப்[பதுடன், அதிக கொழுப்பையும் குறைக்கும். கொத்தமல்லி விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு 2 டீஸ்பூன் கொத்துமல்லி விதைகளை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி கலந்து தினமும் இரண்டு வேளை குடிக்கவும்.


ரோஸ்மேரி: ரோஸ்மேரி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. ரோஸ்மேரி உடலில் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், இருதய நோய்கள் மற்றும் உடலில் உள்ள பிற நாட்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், தினமும் 2 அல்லது 5 கிராம் ரோஸ்மேரி பொடியை எடுத்துக் கொள்ளுங்கள்.


துளசி: துளசியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பெறலாம். இதன் கஷாயம் மற்றும் தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். துளசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


மஞ்சள்:  தமனிகளின் சுவர்களில் குவியும் கொழுப்பை குறைத்து, நரம்புகளில் படிந்திருக்கும் கொழுப்பை உடைக்கும் மசாலாப் பொருள் மஞ்சள். இதற்கு மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ