ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவை கண்டிப்பாக சேத்துக்கோங்க!

வைட்டமின்-டி ஆனது இன்சுலின் சுரப்பு மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.  சூரிய ஒளியானது வைட்டமின் டி-யின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.    

Written by - RK Spark | Last Updated : Feb 9, 2023, 06:09 AM IST
  • சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் தோலைத் தாக்கும் போது வைட்டமின்-டி உற்பத்தியாகிறது.
  • சில உணவு வகைகளில் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளது.
  • வைட்டமின்-டி அதிகம் எடுத்துக்கொள்வது நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கிறது.
ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவை கண்டிப்பாக சேத்துக்கோங்க!  title=

வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ள பெரியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இந்த வைட்டமினை நீங்கள் சில உணவு வகைகளில் இருந்து பெறலாம் அல்லது சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் உங்கள் தோலைத் தாக்கும் போது இந்த வைட்டமின்-டி உடலால் உற்பத்தி செய்யப்படும்.  சூரிய ஒளியானது வைட்டமின் டி-யின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.  வைட்டமின்-டி ஆனது இன்சுலின் சுரப்பு மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மேலும் படிக்க | பொதுவாக காணப்படும் புற்றுநோய்கள்: ஆண்களுக்கு எது?, பெண்களுக்கு எது?

இரத்தத்தில் குறைந்த அளவு வைட்டமின் டி இருப்பது நீரிழிவு நோயை உருவாக்கும் அதிக ஆபத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள டஃப்ட்ஸ் மருத்துவ மையத்தின் குழு, நீரிழிவு அபாயத்தில் வைட்டமின் டி கூடுதல் தாக்கங்களை ஒப்பிட்டு மூன்று மருத்துவ பரிசோதனைகளின் முறையான ஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வை நடத்தியது.  இந்த ஆய்வில் வைட்டமின் டி பெற்ற பெரியவர்களில் 22.7 சதவிகிதம் பேருக்கும், மருந்துப்போலி பெற்றவர்களில் 25 சதவிகிதம் பேருக்கும் நீரிழிவு நோய் ஏற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் மற்றும் வைட்டமின்-டி 15 சதவிகிதம் நீரிழிவு ஆபத்தை குறைப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

மலிவான வைட்டமின் டி சப்ளிமெண்ட் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் நீரிழிவு நோயின் ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.  டப்ளின் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் அயர்லாந்தின் உணவு பாதுகாப்பு ஆணையத்தின் நிபுணர்கள் அவர்களது ஆராய்ச்சியில் அதிக அளவு வைட்டமின் டி உட்கொள்வதால் குறிப்பிடத்தக்க சில விளைவுகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.  வைட்டமின் டி அதிகம் எடுத்துக்கொண்டால் டைப்-2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து குறையும் என்பது உண்மை தான் ஆனால் அதிகப்படியான வைட்டமின்-டி உட்கொள்ளல் உடலுக்கு பல்வேறு வகையான ஆபத்தினை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இவை சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்! ஜாக்கிரதை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News