High Blood Pressure:உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், மருந்துகளின் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இது தவிர, சில பயனுள்ள வீட்டு வைத்தியங்களும் உங்களுக்கு சிறந்த பயனளிக்கும்.  உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் முள்ளங்கி சாறு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்க இந்த வீட்டு வைத்தியத்தை நீங்கள் நிச்சயம் பின்பற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்


முள்ளங்கி சாற்றை தொடர்ந்து உட்கொள்வது BP  நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இது இரத்தத்தையும் சுத்திகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம்  பிரச்சனை உள்ளவர்கள், தினமும் மதியம் முள்ளங்கி சாறு சாப்பிடுங்கள். இது தவிர வேறு பல நன்மைகளும் உள்ளன.


ALSO READ | Rose Water: பலவித சரும பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் பன்னீர்..!!


இருமல் தீரும்


இது தவிர, முள்ளங்கி சாறு உட்கொள்வது இருமலை போக்கும். மேலும், முள்ளங்கியை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். தினமும் 1 கிராம் அளவில் உட்கொள்ளவும். இதுவும் நல்ல பலன் கொடுக்கும்.


அமிலத்தன்மை பிரச்சனையை தீர்க்கும்


அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியை உட்கொள்வதும் நன்மை பயக்கும். இதற்கு முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுங்கள். அதை சமைக்க வேண்டாம்.


ALSO READ | Skin Care for Men: ஆண்கள், அழகனாக மாடல் போல் தோற்றமளிக்க சில டிப்ஸ்..!!


கல் பிரச்சனை


கற்கள் பிரச்சனையில் முள்ளங்கியை உட்கொள்வதும் நன்மை பயக்கும். 100 கிராம் முள்ளங்கி இலையை சாறு எடுத்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கவும். இதனால் பலன் கிடைக்கும்.


மஞ்சள் காமாலைக்கு மருந்து


மஞ்சள் காமாலை பிரச்சனையிலும் முள்ளங்கியை உட்கொள்வது நன்மை பயக்கும். முள்ளங்கி இலைகளை பேஸ்ட் செய்து பாலில் கொதிக்க வைத்து குடித்தால், மஞ்சள் காமாலை பிரச்சனையில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


இரத்த சோகையை நீக்குகிறது


உடலில் இரத்தம் இல்லாததால் இரத்த சோகை ஏற்படலாம். இரத்த சோகை நீங்க, முள்ளங்கி இலையின் சாற்றை ஒரு நாளைக்கு 3 முறை குடிக்கவும். இதனால் பலன் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | Health News: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொடை வள்ளல் இந்த கொடை மிளகாய்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR