ஆன்டிபாடி என்றால் என்ன; கொரோனா தொற்றுடன் போராட அது எவ்வாறு உதவுகிறது?
கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக உலகம் ஒரு வருடத்திற்கும் மேலாகி போராடி வருகிறது. மருத்துவ வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் இரவும் பகலும் இதற்கான தடுப்பூசிகள், மருந்துகள் கண்பிடிப்பதில் ஈடுபட்டு அதில ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தொடர்ந்து மேம்பட்ட மருந்துகள் சிகிச்சைகள் கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
புதுடில்லி: கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக உலகம் ஒரு வருடத்திற்கும் மேலாகி போராடி வருகிறது. மருத்துவ வல்லுநர்களும் விஞ்ஞானிகளும் இரவும் பகலும் இதற்கான தடுப்பூசிகள், மருந்துகள் கண்பிடிப்பதில் ஈடுபட்டு அதில ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். தொடர்ந்து மேம்பட்ட மருந்துகள் சிகிச்சைகள் கண்டறிய தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் அதிகம் பேசப்படுவது ஆன்டிபாடி (Antibody). ஆன்டிபாடிகள் தொற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்குகிறது.
ஆன்டிபாடிகள் என்றால் என்ன?
ஆன் டிபாடிகள் என்பது யுத்த களத்தில் உள்ள போர் வீரனைப் போல, உடலில் தொற்று ஏற்படும் போது, அதனை எதிர்த்து போராடுபவை. ஆன்டிபாடிகள் என்பது தொற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்கும் வகையில், நமது ரத்ததிலும், வேறு உடல் திரவங்களிலும் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும். இது ஒரு கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று ஏற்படும் போது, அதை எதிர்த்து போராட உதவும் நினைவக செல்கள்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலின் இரு உருவாகிறது. ஒரு வைரஸ் தொற்று ஏற்படும் போது, அதை எதிர்த்து போராட உதவும் நினைவக செல்கள்.
ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!
ஆன்டிபாடிகள் மற்றும் COVID-19
ஆன்டிபாடிகள் இம்யூனோகுளோபுலின்ஸ் (immunoglobulins- IgM, IgA மற்றும் IgG) என அழைக்கப்படுகின்றன.
எந்தவொரு அறிகுறியையும் காட்டாத COVID-19 நோயாளிகளின் உடம்பில் குறைந்த அளவிலான IgM காணப்படுகிறது, அதே நேரத்தில் அதிக அளவு IgA மற்றும் IgG ஆன்டிபாடிகள் மிகவும் கடுமையான, மிதமான அறிகுறி நோயாளிகளில் காணப்படுகின்றன. உடலின் ஆன்டிபாடிகளின் நிலை மற்றும் இருப்பை ஆன்டிபாடி சோதனை அல்லது சீரோலஜி சோதனை மூலம் கண்டறிய முடியும்.
ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்
கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம் (நியூயார்க்) நடத்திய ஆய்வில், கோவிட் -19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, குறைந்தது ஆறு மாத காலத்திற்கு அவர்கள் உடம்பில் ஆன் டிபாடிகள் இருப்பது தெரியவந்தது.
ஆனால், ஆன்டிபாடிகள் வாழ்நாள் முழுவதும் கூட நீடித்து இருக்கலாம் என்று வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
COVID-19 தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடிகள்
COVID-19 தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆர்.என்.ஏ (RNA) தடுப்பூசியிலேயே அதிக அளவில் ஆன்டிபாடி உருவானதாக என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பான்மையான மக்களுக்கு, கொரோனா வரைஸ் தடுப்பூசியான கோவிஷீல்ட் (COVISHIELD) மற்றும் கோவாக்சின் (COVAXIN) செலுத்தப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸிலேயே உடலில் நல்ல அளவிலான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதைக் காணலாம் என்றும், கோவேக்ஸின் விஷயத்தில், இரண்டாவது டோஸுக்கு பிறகு அதிக அளவில் ஆண்டிபாடிகள் உருவாகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்தார்.
ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR