எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் தேநீர் குடிக்கலாம்.  ஆரோக்கிய உணர்வுள்ள மக்களுக்கான புதிய சூப்பர்ஃபுட் ஆக உருவாகி வரும் தேநீரின் சுவையான ஆரோக்கியப் பண்புகள் இவை...  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பானத்திலிருந்து ஒரு ஆரோக்கிய சூப்பர்ஃபுட் என உயர்ந்திருக்கும் தேநீர், இனிக்கும் ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ளது.
  
தற்போது நிலவும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையின் காரணமாக, நிரூபிக்கப்பட்ட ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய தேயிலைகள் மிகப்பெரிய அளவில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன. 


மஞ்சள், அஸ்வகந்தா, முருங்கை, துளசி போன்ற ஆயுர்வேத பொருட்களுடன் கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர் மற்றும் சூப்பர்ஃபுட்களுக்கு அதிக தேவை உள்ளது. 


மேலும் படிக்க | சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வேம்பு தேநீர்


Numr Research இன் ஆய்வின்படி, சுமார் 443 மில்லியன் இந்தியர்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக மாதந்தோறும் 4000 ரூபாய்க்கு மேல் செலவிடுகின்றனர். 
நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்கள் இரண்டும் இந்தப் போக்கைப் பிடித்து, அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.


உலகளவில் 20 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய பானமாக (Health Drink) தேநீரை கருதுகின்றனர். 



இதனால் பிராண்டட் டீயை நோக்கி மாறுவதற்கான போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய மாற்றம் இந்தியாவிலும் ஆரோக்கிய தொழில் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. 


மேலும் படிக்க | அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?


ஆயுர்வேதப் பொருட்களால் செறிவூட்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேயிலைகள் ஆன்லைனில், சில்லறைக் கடைகளில் என எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. 


எனவே, 2022 ஆம் ஆண்டில் தேநீர் என்பது ஊட்டச்சத்து மந்திரமாக இருக்கும் என்று சொல்வது சரியானதாகவே இருக்கும்..


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரீமியம் டீ
இந்த சூழ்நிலையில், பிரீமியம் டீகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த பிரீமியம் டீகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறப்பு மற்றும் சுவையூட்டப்பட்ட தேநீர்கள் அடங்கும், 


2022ல் பல புதிய தேநீர் வகைகள் வெளிவரும் என்றும், தேநீர் அருந்துவதை,  அக்கறையுடனான ஆரோக்கிய நடவடிக்கையாக இளைஞர்கள் கருதுவார்கள். இது,அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த பெருகிய முறையில் பின்பற்றப்படும். 


நாம் பசியாக இருக்கும்போது அல்லது ​​தாகமாக இருக்கும்போது உடலின் உள்ளார்ந்த திறனை எவ்வாறு மேம்படுத்த்வது என்ற கேள்விக்கான பதில் தேநீராகவே இருக்கும்.  


மேலும் படிக்க | ரத்த கொதிப்பு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் பூண்டு தேநீர்


தேநீர் ஒரு சூப்பர்ஃபுட்


இப்போது, ​​தேநீர் உண்மையில் ஒரு சூப்பர்ஃபுட்தானா என்று கூறப்பட்டாலும், இது பொதுவாக சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, 


ஆனால் இது ஒரு விஞ்ஞான வரையறையாக இல்லாமல், தேநீரில் காணப்படும் கேடசின்கள் போன்ற நோயைத் தடுக்கும் செயலில் உள்ள பொருட்களைக் கொண்ட உணவால விவரிக்கப் பயன்படுகிறது.


எனவே, இந்த அர்த்தத்தில், தேநீர் உண்மையில் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. ஒன்று, இப்போதெல்லாம் பெரிய உடல்நலப் பிரச்சினைகளாக இருக்கும் பல முக்கிய நோய்களைத் தடுப்பதில் தேநீர் பங்கு வகிக்கிறது.


மேலும் படிக்க | பேப்பர் கப்பில் தினமும் தேநீர் குடிக்கிறீர்களா? உடலுக்கு கடுமையான சேதம் ஏற்படும்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR