Indian Blackberry / Naaval Pazham For Diabetes Control:ஆயுர்வேதத்தில் நாவல் பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த பழமாக கருதப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம்.  அதில் ஒன்று நாவல் பழம். இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம். கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் நாவல் பழத்தை  சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது து பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'இன்சுலின்' நிறைந்துள்ள நாவல் பழம்


நாவல் பழம் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு என்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள வைத்திருக்கிறது. மேலும், இதில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன. இதன் காரணமாக உடல் இன்சுலின் ஹார்மோனை சிறப்பாக பயன்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில், நாவல் பழங்கள், விதைகள் மற்றும் இலைகள் என அனைத்தும் நீரிழிவு நோய்க்கான சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகின்றன.


நீரிழிவு நோய்க்கு ஜாமுன் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம். நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது. இதில் உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கம் ஆற்றல் உள்ளது. இதனால் நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்கும்.


சர்க்கரை வியாதியில் இருந்து விடுபட நாவல் பழத்தை சாப்பிடும் முறை


1. நாவல்  பழத்தை ஒன்றுமே செய்யாமல் அப்படியே சாப்பிடுது கூட சிறந்த பலன் கொடுக்கும்.


2. நாவல் பழ விதை தூள்: நாவல் பழ விதையை காய வைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு, அதனை தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.


3. விதையை தூள் செய்வதை போல், நாவல் பழ மரப்பட்டை தூள் செய்து வைத்துக் கொண்டு இதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்


4. நாவல் பழ ஜூஸ்: நாவல் பழச்சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் இரத்த சர்க்கரையின் அளவு 15 நாட்களிலேயே பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் நோயை முற்றிலும் கட்டுப் படுத்திவிடலாம்.  


மேலும் படிக்க | தர்பூசணி விதையை தெரியாமல் விழுங்கி விட்டால் ஆபத்தா? ஆச்சரியம் தரும் பதில்!


உடல் பருமனை குறைக்க உதவும் நாவல் பழம் 


நாவல் பழம் ஆங்கிலத்தில் பிளாக் பிளம், ஜாவா பிளம், இந்தியன் பிளாக்பெர்ரி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இதில் மிகக் குறைவான கலோரிகளும் நிறைய நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது எடை இழப்புக்கு உகந்த உணவாக இருக்கும். இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். 


நோய் எதிர்ப்பு சக்தி  மற்றும் இதயம் ஆரோக்கியம்


நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நாவல் பழம், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மூட்டு வலியில் இருந்தும் உடலை காக்கின்றன. மேலும், கொல்ஸ்ட்ராலை எரித்து இதய நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கின்றன.


நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிற நன்மைகள்


நீரிழிவு சிகிச்சை, எடை இழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தவிர, நாவல் பழத்தை சாப்பிடுவது வேறு  பல நன்மைகளையும் வழங்குகிறது. அவை ஆரோக்கியமான சருமம்,
ஆரோக்கியமான கூந்தல், சிறந்த இரத்த ஓட்டம் ஆகியவை.


நீரிழிவு நோயின் அறிகுறிகள்: 


இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், காரணமில்லாத எடை இழப்பு, அதிக பசி, மங்கலான பார்வை, கை மற்றும் கால்களில் உணர்வின்மை, ஆறாத காயங்கள், வறண்ட சருமம் ஆகியவை நீரிழிவு நோய் மற்றும் அதிக இரத்த சர்க்கரையின் அறிகுறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | உடல் எடை சர்ரென இறங்க..‘இந்த’ நேரத்தில் உடற்பயிற்சி செய்து பாருங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ