Dark Circles: கருவளையங்களை நீக்கும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!
Dark Circles: எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
இன்றைய வாழ்க்கை முறை கண்களையும் சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது. எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். இந்த சிக்கலை எதிர்கொள்வது சாமான்யர்கள் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள பிரபலங்களும் இந்த பிரச்சனையுடன் போராடுகிறார்கள்.
கருவளையம் பிரச்சனை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், வேலையில் இருக்கும் பெரும்பாலானோர், கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதாலும், போதுமான தூக்கம் இல்லாததாலும் கருவளையம் பிரச்சனை என்பது பொதுவாக அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகி விட்டது. அது முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது. பொதுவால பல பெண்கள் மேக்கப் மூலம் கருவளையங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். சிலர் கருவளையங்களை போக்கும் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கருவளையத்தை மிக எளிதாக போக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆம், மிக எளிதாக, பகக் விளைவுகள் எதுமின்றி, எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் கருவளையங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
கருவளையங்களை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள்:
புதினா சாறு:
புதினா கசக்கிய புதினா இலைகளும் கருவளையங்களை சிறப்பாக போக்கும். புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்து, அதனை கண்களுக்கு கீழ் தடவவும். அதனை அப்படியே 10-15 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்னர் கண்களை கழுவுங்கள். சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.
உருளைக்கிழங்கு சாறு:
உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்குக் கீழே தடவி வந்தால் கருவளையத்தைப் போக்கலாம். இதைப் பயன்படுத்த, உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றை தனித்தனியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கண்களுக்குக் கீழே சாற்றை தடவவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.
கற்றாழை:
கருவளையத்தை போக்க இது ஒரு பயனுள்ள மாய்ஸ்சரைசர் ஆகும். கண்களைச் சுற்றியுள்ள பகுதியை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, கருவளையங்களையும் நீக்குகிறது. இது தவிர, கற்றாழை சருமத்திற்கு ஊட்டமளிக்க உதவுகிறது.
தக்காளி:
தக்காளியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, 2 டீஸ்பூன் தக்காளிச் சாற்றில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே தடவி, 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவவும், இவ்வாறு செய்தால் கருவளையம் பிரச்சனை நீங்கும்.
வெள்ளரிக்காய்:
வெள்ளரி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. இதைப் பயன்படுத்த, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டவும். அதன் பிறகு, 10 நிமிடங்களுக்கு உங்கள் கண்களில் வைத்திருங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ