எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தா தாக்காளி பக்கம் தலை வச்சு படுக்காதீங்க!

தக்காளியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி என்றால் மிகையில்லை. இதில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தக்காளி ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, ஆனால் சில நோய் அல்லது உடல் நல குறைவு இருந்தால், தக்காளியை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். 

1 /5

சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தக்காளியை அதிகம் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேலும் கெடும். தக்காளியில் ஆக்சலேட் உள்ளது, இது கற்களை வளர்க்கிறது. சிறுநீரக கல் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடுவதால், பிரச்சனை அதிகரிக்கும்.

2 /5

வயிற்றுப்போக்கு ஏற்படும் போது தக்காளி சாப்பிடுவதை தவிர்க்கவும். இதில் உள்ள சால்மோனெல்லா பாக்டீரியா, வயிற்றுப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கும். 

3 /5

தக்காளி சாப்பிடுவது மூட்டு வலி பிரச்சனையை அதிகரிக்கும். மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

4 /5

சிலருக்கு தக்காளி சாப்பிடுவதால் அலர்ஜி பிரச்சனைகள் வரலாம். தக்காளி தோல் அலர்ஜியை ஏற்படுத்தும். தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் தக்காளி சாப்பிடக்கூடாது.

5 /5

தக்காளி சாப்பிடுவதால் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனை அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தக்காளி சாப்பிடுவதால் வயிற்று வலி பிரச்சனையும் அதிகரிக்கும்.