வேப்பம் பூவின் ருசியும் நன்மையும் தெரியும் ஆனால் வேப்பம்பூ சர்பத் செய்யும் மாயாஜாலம் தெரியுமா?
வேம்பின் அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளித்தாலும் அதில் உள்ள பூக்கள் மட்டுமே உண்ணத் தகுந்தவை
Neem Flower Health Benefits: வேப்பிலை என்றாலே கசப்பு என்பதும், ஆனால் அதன் ஆரோக்கிய நன்மைகளும் அனைவருக்கும் தெரியும். வேப்பமரத்தின் காற்று உடலுக்கு மிகவும் நல்லது என்பதும் உண்மை. கசப்பு சுவையுள்ள வேப்பமரத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம்.
வேப்ப மரத்தின் இலைகள், பூக்கள், தண்டு பட்டை மற்றும் விதைகள் போன்ற வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பவை.
பொதுவாக வேம்பின் அனைத்து பகுதிகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை அளித்தாலும் அதில் உள்ள பூக்கள் மட்டுமே உண்ணத் தகுந்தவை.
வேப்பப் பூக்களை சாப்பிட்டால் என்ன நன்மை இருக்கிறது என்று அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். வயிற்று உப்புசம், வாயு, மலச்சிக்கல், மூலம், மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வேப்ப இலை மற்றும் வேப்ப மரப்பட்டையின் தூள் பயன்படுத்தப்படுகிறது. இவை மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன.
வேப்பம்பூவை சாப்பிடுவது வயிற்றில் பித்தம் அல்லது பித்த உற்பத்தியை சமநிலைப்படுத்த உதவுகிறது, சளி உருவாகும் செயல்முறையை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடல் புழுக்களிலிருந்து விடுபடுகிறது (Neem Flower Health Benefits In Tamil)
மேலும் படிக்க | அஸ்வகந்தாவின் ஆரோக்கிய நன்மைகள்: ஆண்களுக்கோ இது ஒரு ஆபத்பாந்தவன்
வேப்பம்பூவை சாப்பிடுவதால் என்ன பயன்?
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் உணவியல் நிபுணருமான ருஜுதா திவேகர் (Rujuta Diwekar) நன்மை பயக்கும் வேப்பம் பூக்கள் பற்றி சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், வேப்பம் பூவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசிய ருஜுதா திவேகர், வேப்பம்பூவை சாப்பிடும் முறையையும் சுவாரஸ்யமாக கூறியுள்ளார். இந்த முறை தென்னிந்தியாவில் கோடை காலத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கோடைகால பானமான வேப்பம் பூ சர்பத் ஆகும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, வேப்பம் பூ நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும், ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வேப்பம்பூவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வேப்பம்பூவை மென்று சாப்பிட்டால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.
இயற்கையான இரத்த சுத்திகரிப்பாளராக இருப்பதால், வேப்ப இலைகள் மற்றும் வேப்பம்பூவை உட்கொள்வதன் மூலம் பருக்கள் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.(Natural remedies for pimple/acne)
வேப்பம் பூக்களை உட்கொள்ளும் வழிமுறைகள்
வேப்பம் பூக்களிலிருந்து கோடைகாலத்தில் பருகக்கூடிய சிறப்பு பானத்தை எப்படி தயாரிப்பது என்று கூறியுள்ளார். வேப்பப் பூக்களால் தயாரிக்கப்பட்ட சர்பத்தின் செய்முறையைப் பகிர்ந்து கொண்ட அவர், அதை சாப்பிடுமாறு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார். வேப்பம்பூ சர்பத் செய்யும் செய்முறை இதுதான்...
வேப்பம்பூவை காயவைத்து பொடியாக செய்து வைத்துக் கொண்டு எந்த பருவத்திலும் பயன்படுத்தலாம். கோடைக்காலத்தில் அப்படியே வேப்பம்பூக்களை பறித்து சுத்தம் செய்தபிறகு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க | இள வயதிலேயே நரைமுடியா: இவை காரணமாக இருக்கலாம்
ஒரு கிளாஸ் சர்பத்தில் ஒரு தேக்கரண்டி வேப்பம்பூ பொடி/கலவை கலக்கவும்.
பின்னர் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு தூள் மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
2 கிளாஸ் குளிர்ந்த நீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது சுவைக்கு ஏற்றவாறு வெல்லம் தூள் சேர்க்கவும்.
இப்போது சர்பத்தில் அரை டீஸ்பூன் இஞ்சி விழுது சேர்க்கவும்.
பிறகு, பச்சை மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
1-2 நிமிடங்களுக்குப் பிறகு அதை உட்கொள்ளவும்.
வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற கோடைக்கால சர்பத் இது. ஆரோக்கியமான வேப்பம்பூ சர்பத்தை அவ்வப்போது குடித்துவந்தால் நோய்கள் கிட்ட நெருங்கவும் பயப்படும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | COVID 4th Wave: ஒமிக்ரானில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR