அனந்த் அம்பானியின் அசர வைக்கும் வெயிட் லாஸ் ஜர்னி! 108 கிலோ குறைத்தார்-எப்படி?
Anant Ambani Weight Loss Journey : அனந்த் அம்பானி குறைத்த அத்தனை எடையும், இவரது உடலில் இருக்கும் பிரச்சனை காரணமாக மீண்டும் அதிகரித்து விட்டது. இவருக்கு ஆஸ்துமா கோளாறு இருந்ததாகவும் இதுவே இவர் உடல் எடை அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
Anant Ambani Weight Loss Journey : உலக பணக்கார பட்டியலில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி 18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்தார்.
தற்போது இந்தியா முழுவதும் மட்டுமன்றி, உலகம் முழுக்க பேசப்படுவது, ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்செண்டின் திருமணம் பற்றித்தான். உலகின் டாப் 10 பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் பெரும் பணக்காரராக விளங்குகிறார். இவருக்கும், இவரது சிறுவயது தோழி ராதிகா மெர்செண்டிற்கும் திருமணம் நடைபெறும் நிலையில், இவர்களின் ப்ரீ-வெட்டிங் செலிப்ரேஷனும் சில மாதங்களுக்கு முன்னர் களைக்கட்டியது. இந்த நிலையில், ஆனந்த் அம்பானி தனது திருமணத்தில் உடல் பருமனுடன் இருப்பது குறித்து பலர் பேசி வருகின்றனர். இவர், ஒரு காலத்தில் 18 மாதங்களில் 108 கிலோ எடையை குறைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் பருமனுடன் இருந்த அனந்த் அம்பானி:
உடல் எடையுடன் இருப்பது என்பது பலருக்கு பழகிப்போன விஷயம் என்றாலும், இந்த எடையை மெயிண்டெயின் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். அப்படி, ஒரு காலத்தில் உடல் பருமனுடன் அவதிப்பட்டவர் அனந்த் அம்பானி. ஒரு கட்டத்தில், 208 கிலோ உடல் எடையுடன் இருந்த இவர் அதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். தனது ஆரோக்கியத்தை தன் கைகளில் எடுத்துக்கொண்ட அனந்த் அம்பானி 18 மாதங்களில் 108 கிலோ வரை குறைத்தார். இது எப்படி?
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே..
ஸ்ட்ரிக்ட் ஆன டயட்:
அனந்த் அம்பானி, தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் தனது முயற்சியில் முதலில் முழு மனதுடன் இறங்கினார். தனது டயட், வர்க் அவுட்டுகளில் நன்றாக கவனம் செலுத்தி வந்த இவர் அதை மிகவும் ஸ்ட்ரிக்டாக பின் தொடர்ந்திருக்கிறார். தன் டயட்டில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொண்ட இவர், அளவு சாப்பாட்டுகளையும் மெயிண்டெயின் செய்திருக்கிறார். மேலும், எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை சரியாக கணக்கிட்டு டைமிற்கு சாப்பிட்டிருக்கிறார்.
தனக்கென தனியாக உடற்பயிற்சி ஆலோசகரை வைத்துக்கொண்ட இவர், தினமும் கார்டியோ, ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங், யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். டயட்டும் உடற்பயிற்சியும் சேர்ந்து இவருக்கு கைக்கொடுத்ததால் இவரது எடையும் வேகமாக குறைய ஆரம்பித்திருக்கிறது.தினமும் 1,200 முதல் 1,500 வரை கலோரிகளை எடுத்துக்கொண்ட இவர் தனது உணவு பழக்கத்தையும் முற்றிலுமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். துரிதப்படுத்தப்பட்ட கொழுப்புகளை தனது உணவில் இருந்து கட் செய்த இவர், கார்போ ஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளையும் ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கும் உணவுகளை மட்டும் தன் தினசரி டயட்டில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.
அனந்த் ஆம்பானி, உடல் எடை குறைப்பில் மட்டும் கவனம் செலுத்தியதால் தினமும் 5 முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததாக ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். இவர், தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள், கலோரிகளை எரிக்கும் பயிற்சி மற்றும் ஒட்டுமொத்த ஃபிட்னஸ் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
எடை அதிகரிப்பு..!
அனந்த் அம்பானி குறைத்த அத்தனை எடையும், இவரது உடலில் இருக்கும் பிரச்சனை காரணமாக மீண்டும் அதிகரித்து விட்டது. இவருக்கு ஆஸ்துமா கோளாறு இருந்ததாகவும் இதுவே இவர் உடல் எடை அதிகரிக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ