Tripura HIV Crisis : இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத மற்றும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் நாேய்களுள் ஒன்று HIV (Human Immunodeficiency Viruses). இந்த நோய் தாக்கினால் இதிலிருந்து மீண்டு வருவதற்கு மருந்து எதுவும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த நோயை கட்டுப்படுத்த சில மருந்துகள் இருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, ஒரு மாநிலத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது எந்த மாநிலம்? இந்த நோய் பரவியது எப்படி? முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிபுரா மாநிலத்தில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட சோதனையின் மூலமாகத்தான் இந்த அதிர்ச்சிகரமான உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் இருக்கும் 164 சுகாதார மற்றும் மருத்துவ மையங்களில் பல மாணவர்கள் ஹெச்ஐவி தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஊசி மூலம் செலுத்திக்கொள்ளும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. இதை அடிப்படையாக வைத்து அந்த மாநிலத்தில் AIDS தடுப்பு பிரிவினர் அந்த பள்ளிகள் மர்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு HIV நோய் தொற்று பாதிப்பு பரிசோதனையை மேற்கொண்டனர். அதில், மொத்தம் 828 மாணவர்களுக்கு HIV நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 527 பேர் தற்போது உயிருடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இது குறித்து பேசிய அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரத்தை தெரிவித்தனர். மேலும், பல மாணவர்கள் மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அந்த நாட்டின் கல்லூரிகளில் பயின்று வருவதாகவும் தெரிவித்தனர். 


தொற்று பரவ காரணம் என்ன?


திரிபுராவில் இருக்கும் 164 சுகாதார மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போதைக்கு அடிமையாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பதாக அதிர்ச்சிகர உண்மை வெளியாகியிருக்கிறது. 


அது மட்டுமன்றி, போதைக்கு அடிமையாகியிருக்கு பெருமளவு எண்ணிக்கையை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் இருவருமே அரசு வேலை பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்.  இதனால், அவர்கள் தங்களின் குழந்தைகள் எது கேட்டாலும் செய்து கொடுத்து விடுவதாகவும், இதனால் தங்கள் குழந்தைகள் தீய வழிக்கு சென்ற பல நாட்களுக்கு பிறகுதான் இவர்களுக்கு அந்த உண்மையே தெரிய வருவதாகவும் கூறியிருக்கின்றனர்.


மேலும் படிக்க | HIV Treatment: எச்ஐவி எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது! 'மருத்துவ அதிசயம்'


ஒரே ஊசி..


AIDS மற்றும் HIV தொற்று பாதிப்பு உலகளவில் பெரும் நோய் தொற்றாக பார்க்கப்படுகிறது. இந்த நோய், இரத்த மாற்றம் காரணமாக பரவலாம். ஒரே ஊசி மூலம் பலர் போதை மருந்தை உடலில் செலுத்திக்கொள்வதால் இந்த நோய் அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதுவே, தற்போது இத்தனை மாணவர்கள் ஹெச்ஐவிக்கு இரையானதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 


இந்த கொடிய நோயை சரிசெய்வதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், ஒரு சில சிகிச்சை முறைகள் மூலமாக இதை கட்டுப்படுத்தலாம். இதற்கு ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இதனால் உடலில் நோய் வைரஸ் தாக்கிய பகுதிகள் அழிந்து, நோயெதிர்ப்பு சக்திகள் மூலம் மேலும் இந்த வைரஸ் உடலை அழிக்காமல் பாதுகாக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ