HIV Treatment: எச்ஐவி எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது! 'மருத்துவ அதிசயம்'

Innovation On HIV Treatment: எச்.ஐ.வி.யை வென்ற நோயாளி ஜெர்மனியில் வசிக்கிறார். 2008ல் அவருக்கு எச்.ஐ.வி.பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளித்துள்ளது  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 24, 2023, 04:27 PM IST
  • காலனை வென்ற எச்.ஐ.வி நோயாளி!
  • மார்கண்டேயனாக இல்லாவிட்டாலும் நோயை வென்றுவிட்டார்
  • எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை கண்டறியப்பட்டது
HIV Treatment: எச்ஐவி எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டது! 'மருத்துவ அதிசயம்'  title=

எய்ட்ஸ் குணப்படுத்த முடியாத நோய் என்று இதுவரை நம்பப்பட்டது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் அதிசயம் நடந்துள்ளது. எச்.ஐ.வி நோயாளி ஒருவர் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் முழுமையாக குணமடைந்துள்ளதாக பிரான்சின் பாஸ்டர் நிறுவனம் கூறியுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் எச்.ஐ.வி நோயால் குணப்படுத்தப்பட்ட உலகின் மூன்றாவது நோயாளி ஆவார்.

எச்.ஐ.வி.யை வென்ற நோயாளி ஜெர்மனியில் வசிக்கிறார். 2008ல் அவருக்கு எச்.ஐ.வி.பாசிட்டிவ் இருப்பது தெரிய வந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கும் ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டில், அவருக்கு ஒரு புதிய சிகிச்சை அளிக்கப்பட்டது, இது அவரது உடலில் மீண்டும் எச்.ஐ.வி திரும்புவதற்கான எந்த அறிகுறியும் அவருக்கு இல்லை. 

எய்ட்ஸை வென்ற உலகின் மூன்றாவது நோயாளி

எச்.ஐ.வி.யால் வெற்றி பெற்ற நோயாளி ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் வசிப்பவர். 2008 ஆம் ஆண்டில், நோயாளி எச்.ஐ.வி பாசிட்டிவ் என்பதை அறிந்து கொண்டார். அதன் பிறகு அவருக்கும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. இது கடுமையான மைலோயிட் லுகேமியா என அடையாளம் காணப்பட்டது. 2013 ஆம் ஆண்டில், மருத்துவர்கள் அவரது எலும்பு மஜ்ஜையை ஸ்டெம் செல்கள் உதவியுடன் மாற்றினர். ஒரு பெண் நன்கொடையாளரால் இந்த மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானது. பெண் நன்கொடையாளரிடமிருந்து சிசிஆர் 5 பிறழ்வு மரபணு உடலில் நோய் பரவுவதை முற்றிலும் தடுக்கிறது.

ஆச்சரியம் ஏற்படுத்திய விஞ்ஞானம்

இது ஒரு வகையான அரிய மரபணு, செல்களில் எச்ஐவி பரவுவதைத் தடுக்கிறது. இதற்குப் பிறகு, எச்ஐவிக்கு அளிக்கப்படும் ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையை நிறுத்த 2018 இல் மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் பிறகு இந்த நோயாளி 4 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டார். மற்றும் பல சோதனைகள் செய்யப்பட்டன. நோயாளிக்கு எச்.ஐ.வி மீண்டும் வரவில்லை.

மேலும் படிக்க | குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட... சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

நோயாளிக்கு முதலில் 2007 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்டது.  தற்போது ஐந்தாவது ஆண்டும் தொடங்கிவிட்ட நிலையில், அவருக்கு எச்.ஐ.வி பிரச்சனை ஏதும் இல்லாமல் நலமாக இருக்கிறார்.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் எய்ட்ஸ் சிகிச்சை

எலும்பு மஜ்ஜை என்றால் என்ன? எச்.ஐ.வி எய்ட்ஸ் சிகிச்சைக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம்.

எலும்பு மஜ்ஜை 

எலும்பு மஜ்ஜை என்பது ஸ்டெம் செல்களைக் கொண்ட எலும்புகளுக்கு இடையில் காணப்படும் ஒரு பொருள். எலும்பு மஜ்ஜை குறைபாடுடையால், தலசீமியா, செல் அனீமியா, லுகேமியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நோயாளியின் எலும்பு மஜ்ஜை இடமாற்றம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க | ஆண்களுக்கு ஹெல்த் அலர்ட்! சிறுநீரகத்தை பலவீனப்படுத்தும் ’இந்த’ உணவுகள் வேண்டாமே!

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தொடர்பான முக்கிய தகவல்கள் 
எலும்பு மஜ்ஜை வேலை செய்வதை நிறுத்தும்போது, ​​​​அந்த நோய்களில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு, நோயாளியின் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளரின் எலும்பு மஜ்ஜையுடன் பொருந்துவது அவசியம்.
மேலும், மனித லிகோசைட் ஆன்டிஜென் அதாவது 'எச்எல்ஏ' பொருத்தம் இருப்பதும் அவசியம்.
எச்.எல்.ஏ என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் ஒரு வகை புரதமாகும்.
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு 'HLA' ஒரே மாதிரியாக இருக்க 25 சதவிகித வாய்ப்பு உண்டு
குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் 'HLA' ஒரே மாதிரியாக இருக்க ஒன்று முதல் மூன்று சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உண்டு .

மேலும் படிக்க | Blood Purifier: ரத்தத்தை சுத்தம் செய்ய ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்!

எச்எல்ஏ

'எச்எல்ஏ' 100 சதவீதம் பொருந்தினால், மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு சிக்கலான மருத்துவ முறையாகும், இதில் சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜை செல்களால் மாற்றப்படுகின்றன. அதன் செயல்முறை இரண்டு வகையானது. அவை தன்னியக்கம் எனப்படும் ஆட்டோலோகஸ் மற்றும் அலோஜெனிக்.

ஆட்டோலோகஸ்
இதில் நோயாளியின் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். பிறகு கீமோதெரபி கொடுக்கப்படும். இதற்குப் பிறகு, அதே ஸ்டெம் செல்கள் மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன.

அலோஜெனிக் 
இதில் முதலில் ஒரு குடும்ப உறுப்பினரின் ஸ்டெம் செல் எடுக்கப்படுகிறது. அவரது ஸ்டெம் செல் நோயாளியின் உடலில் பொருத்தப்படுகிறது

 2021 இல், 3 கோடியே 84 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் நோய்க்கு பலியானார்கள். அதனால் தான் மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வாழ்வின் புதிய நம்பிக்கையாக தெரிகிறது.

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் என்பது நோயல்ல. நோயை எதிர்க்கும் சக்தியில்லாமல் போய்விடும் நிலையை எய்ட்ஸ் என்று சொல்கிறோம்.   ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அளவில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை.  எச்.ஐ.வி. கிருமிகள் உடலில் இருக்கும்போது, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது. எனவே, இந்தப் பிரச்சினைக்கான தீர்வு மருத்துவம் என்பதால், அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் இந்த சிக்கலை தீர்க்க விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். எச்.ஐ.வி என்பது, பாதிப்பு இருப்பவர்களிடமிருந்தே, இல்லாதவர்ஆஆஆ

மேலும் படிக்க | Pomegranate: மாதுளை சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா? மாதுளம்பழமும் பெண்களின் ஆரோக்கியமும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News