Facial செய்து கொண்ட 3 பெண்களுக்கு HIV தொற்று! எப்படி தெரியுமா?
Latest News Vampire Facial HIV : முகம் பொலிவாக இருக்க ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெண்களை அதிர வைத்துள்ளது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்
Latest News Vampire Facial HIV : அமெரிக்காவின் நியூ மெக்சிகோவை சேர்ந்த மூன்று பெண்கள் ஹச் ஐ வி யால் பாதிக்கப்பட்டனர். ஆரோக்கியமாக இருந்த பெண்கள் திடீரென எச் ஐ வி யால பாதிக்கப்பட்டது அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் என்ன என அமெரிக்க நோய் தடுப்பு நிறுவனம் ஆராயும் போது தான் அந்த திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது
கடந்த 2018 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ மாகாணத்தில் ஒரு ஸ்பா இயங்கி வந்தது. அந்த ஸ்பாவில் பெண்களுக்கான பல்வேறு பியூட்டி சேவைகள் இருந்துள்ளது. இதில் வேம்பையர் பேசியல் என்ற சேவையும் இருந்துள்ளது..இந்த பேசியல் பொதுவாக ரத்தத்தை வைத்து செய்யப்படும். அதாவது பேசியல் செய்பவரிடமே இருந்து ரத்தத்தை எடுத்து அதில் உள்ள பிளாஸ்மாவை பிரித்தெடுத்து பின்னர் முகத்தில் ஊசி மூலம் குத்தி செலுத்தப்படும் . இதற்கு கட்டணமாக 15 ஆயிரம் முதல் 30000 வரை பெறப்படுகிறது.. சிகிச்சை அளிக்கும் ஸ்பா, கிளினீக்குகளை பொறுத்தும், அங்குள்ள வசதிகளின் அடிப்படையிலும் கட்டணம் என்பது மாறுபடும்.
அவ்வாறு அந்த ஸ்பாவில் வேம்பையர் பேசியல் செய்த மூன்று பெண்களுக்கு தான் அடுத்தடுத்து எச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்கா நோய் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. முதலில் vampire பேசியல் செய்த ஒரு பெண் ஹச் ஐவியால் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் 2 பெண்கள் என ஆக மொத்தம் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சட்ட விரோதமாக ஸ்பா நடத்திய உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் வேம்பையர் பேசியல் செய்த மூன்று பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதியானது இதனால் அங்கு பேசியல் மற்றும் இதர சேவைகள் எடுத்துக்கொண்ட பெண்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தண்ணீரில் உப்பு கலந்து கோடை காலத்தில் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும் அந்த நோய் என்பது வேம்பயர் ஃபேஷியல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ஊசி மூலம் தான் பரவி இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தி இருப்பதாலே இந்த பிரச்சனை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு அந்த ஊசி தான் காரணமா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது. அழகை மேம்படுத்த பேஷியல் செய்த பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேம்பையர் ஃபேஷியல் என்றால் என்ன?
உலகில் பல ஃபேஷியல், காய்கறி ஃபேஷியல், ஆர்கானிக் ஃபேஷியல் என பல்வேறு வகையான ஃபேஷியல் இருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலுருந்தும் முற்றிலும் மாறுபட்ட ஃபேஷியல்தான், இந்த வேம்பையர் ஃபேஷியல். Vampire என்றால் ஆங்கில சொல், ரத்தத்தை குடிக்கும் ஒரு மனித-மிருகத்தை குறிக்கும் சொல்லாகும். அதை நம் ஊரில், ‘ரத்தக்காட்டேரி’ என கூறுவோம். இந்த பெயரைதான் அந்த வினோதமான ஃபேஷியலுக்கும் அமெரிக்காவில் வைத்துள்ளனர். இதில், நம் நரம்பில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்மா (இரத்த அணுக்கள்) நம் முகத்தில் செலுத்தப்படும். வேறு ஒருவருடையதாக இல்லாமல், நமது உடலில் இருந்து எடுக்கப்படும் ரத்தம்தான் அவ்வாறு முகத்தில் செலுத்தப்படுவதாக இருக்கும். இதனால், இதை பலர் பாதுகாப்பானது என்று நினைத்தனர். இந்த வகை வேம்பையர் ஃபேஷியலினால் முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும் என்றும், சருமத்தின் அமைப்பு மெருகேறும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, முகத்தை பொலிவாக்கவும் சிலர் இந்த ஃபேஷியலை செய்து கொள்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ