Dengue: மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழை என்றால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். மழை வெயிலில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், மழைக்காலத்தில் பல தொற்றுகள் மற்றும் நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன. மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சலுக்கான அச்சமும் அதிகரிக்கத் தொடங்குகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசாங்கம் சார்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்களும் வெளியிடப்படுகின்றன. எச்சரிகையாக இருப்பதுடன் மக்கள் அதை சரியான நேரத்தில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


100க்கும் மேற்பட்ட நாடுகளில் டெங்கு காய்ச்சலால் ஆபத்து


டெங்கு காய்ச்சல், பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதால் பரவுகிறது. கொசுக்கள் சூடான மற்றும் ஈரமான சூழலில் செழித்து இந்த நோயை உண்டாக்கி பரப்புகின்றன. இந்த நோய் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்களை பாடாய் படுத்துகிறது. 


பனசங்கரி பெங்களூரு மதர்ஹுட் மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் நியோனாட்டாலஜி மூத்த ஆலோசகர் சந்தோஷ் குமார், “குழந்தைகளுக்கு பல்வேறு வகையான டெங்கு காய்ச்சல் வருவதற்கான ஆபத்து உள்ளது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆபத்து சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக காய்ச்சலால் உருவாகும் நோய் குறுகிய காலத்திற்கே இருக்கும். இந்த காய்ச்சலில் வாந்தி மற்றும் வயிற்று வலி, பசியின்மை மற்றும் தசை வலி ஆகியவையும் இருக்கலாம். ஆனால் அசாதாரண மேல் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் இரைப்பை குடல் அழற்சி உள்ள குழந்தைகளும் இந்த பருவத்தில் டெங்குவால் பாதிக்கப்படக்கூடும்” என கூறினார். 


நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு


- கர்நாடகாவில் 5,374 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் இறந்துள்ளனர். 


- தெலங்கானாவில் 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


- ஒடிசாவில் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


- கேரளாவின் எர்ணாகுளத்தில் 400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


- ஆந்திராவில் டெங்கு மற்றும் மலேரியா ஆகிய இரண்டாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?


- அதிக காய்ச்சல்
- கடுமையான தலைவலி
- தசைகளில் வலி
- மூட்டு வலி 
- சொறி போன்ற அறிகுறிகள் 


மேலும் படிக்க | வேகமாக கொழுப்பை எரிக்க-உடலை குறைக்க...தினமும் 5 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க!


அறிகுறிகளை அடையாளம் காண்பது அவசியம்: நிபுணர்கள்


டெங்கு காய்ச்சலை பற்றி நிபுணர்கள் கூறியுள்ள சில முக்கிய விஷயங்களை இங்கே காணலாம்


- டெங்கு காய்ச்சல் பொதுவாக அனைவரையும் தாக்கும்


- இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவது அவசியம் 


- டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் தானாக சரியாகும்.


- எனினும், சில சமயங்களில் இது கடுமையான வடிவத்தை எடுப்பதுண்டு.


- இது டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் அல்லது டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படுகிறது.


டெங்குவின் தீவிரமான வடிவத்தின் அறிகுறிகள் என்ன?


- தொடர்ந்து வாந்தியெடுப்பது
- சளியில் இரத்தப்போக்கு
- இரத்த ஓட்டம் செயலிழப்பு 


டெங்கு காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிவது நோயாளிக்கு நன்மை பயக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது மட்டுமின்றி, இதன் மூலம் டெங்கு வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமலும் தடுக்க முடியும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவது வைரஸைக் கட்டுப்படுத்த உதவும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


- காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்தால், இவற்றால் ஏற்படும் நீரழிவை போக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
- டெங்கு காய்ச்சலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- பொது சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்
- கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ