இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!

Symptoms of Cholesterol:உடல் செயல்பாடு நன்றாக இருக்க, நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 11, 2024, 01:48 PM IST
  • கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படும்.
  • நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • தாடை வலியும் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கான ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
இந்த இடங்களில் வலி இருந்தால் ஜாக்கிரதை: கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!

Symptoms of Cholesterol: இன்றைய அவசர உலகில் பல வித நோய்கள் நம்மை அவ்வப்போது ஆட்கொள்கின்றன. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இவற்றால் நாம் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறோம். இவற்றில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையும் ஒன்றாகும். 

Add Zee News as a Preferred Source

கொலஸ்ட்ரால் நம் இரத்தத்தில் இருக்கும் ஒரு ஒட்டும் பொருள். அனைவரது உடலிலும் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது

- நல்ல கொலஸ்ட்ரால்
- கெட்ட கொலஸ்ட்ரால்

உடல் செயல்பாடு நன்றாக இருக்க, நல்ல கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. மனித உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், ​​அது நரம்புகளில் குவிந்து தமனிகளைத் தடுக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற தீவிர இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. 

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, ​​உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படுகின்றன. இவற்றை பற்றிய புரிதல் நமக்கு இருப்பது அவசியமாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், உடலின் சில பகுதிகளில் வலி ஏற்படும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பின் அறிகுறிகள் என்ன? கொலஸ்ட்ரால் அதிகரித்தால் எந்தெந்த பாகங்களில் வலி ஏற்படும்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கால்களில் வலி

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் கால்களிலும் வலி ஏற்படக்கூடும். தமனிகளில் கொலஸ்ட்ரால் சேர்வதன் காரணமாக கால்களின் இரத்த நாளங்கள் சுருங்கி வலி ஏற்படும். இதனால் பிடிப்புகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.  இதனால் நடப்பதிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகையால், கால்களில் இப்படிப்பட்ட வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிசசை பெறுவது நல்லது. 

கைகளில் வலி

கைகளில் வலி எடுப்பதும் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறியாக இருக்கலாம். இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால் கைகளின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் பாதிக்கிறது, இதன் காரணமாக கையில் கடுமையான வலி ஏற்படுகின்றது. இந்த வலி சில நேரங்களில் தோள்பட்டை வரையும் பரவுவதுண்டு. காரணம் இல்லாமல் கைகளில் அடிக்கடி வலி எடுத்தால் உடனடியாக மருத்துவரை அணுகி கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

மேலும் படிக்க | பற்களை நறநறன்னு கடிக்காதீங்க! ‘இந்த’ ஆபத்தான 5 பிரச்சனைகள் வரலாம்..

நெஞ்சு வலி

நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், ​​இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நெஞ்சில் வலி ஏற்படுகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

முதுகு வலி

கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படும். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, ​​கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. வேறு காரணம் ஏதும் இல்லாமல் முதுகு வலி ஏற்பட்டால், உயர் கொலஸ்ட்ராலுக்கான சிகிச்சை பெறுவது நல்லது. 

தாடையில் வலி

தாடை வலியும் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கான ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. ஆகையால் தாடை வலி இருந்தால், அதை அலட்சியப்படுத்தக்கூடாது.  இது அதிக கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கொலஸ்ட்ரால் தமனிகளில் அதிகமாக சேர்ந்தால், ​​தாடைகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, தாடைகள் மற்றும் கழுத்தில் வலி ஏற்படலாம். இந்த அறிகுறி உங்களுக்கு ஏற்பட்டாலும், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் லெவலை சட்டென குறைக்கும் ஆரோக்கியமான உணவுகள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News