பற்களை நறநறன்னு கடிக்காதீங்க! ‘இந்த’ ஆபத்தான 5 பிரச்சனைகள் வரலாம்..

Side Effects Of Teeth Grinding : பலருக்கு பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 11, 2024, 12:41 PM IST
  • பற்களை கடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
  • ஆபத்தான பின்விளைவுகள் காத்திருக்கு!
  • என்னென்ன தெரியுமா?
பற்களை நறநறன்னு கடிக்காதீங்க! ‘இந்த’ ஆபத்தான 5 பிரச்சனைகள் வரலாம்.. title=

Side Effects Of Teeth Grinding : நன்றாக மென்று சாப்பிடுவதற்கு, அழகாக சிரிப்பதற்கு என நம் உடலின் முக்கியமான பாகமாக விளங்குபவை, பற்கள்தான். இதில் கால் வலி, கை வலி, மூட்டு வலி போல பற்களிலும் வலி ஏற்படலாம். ஆனால், அப்போது பலரும் அதை பெரிதும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். இதனாலேயே அது சொத்தை அல்லது நரம்பு பாதிப்பு போன்ற பெரிய பிரச்சனையில் கொண்டு சென்று விட்டுவிடும். பல் வலி வருவதற்கு வாய் சுகாதாரம், நரம்பு பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது, பற்களை கடிப்பது. இதனை ஆங்கிலத்தில் பிரக்ஸிசம் (Bruxism) என கூறுகின்றனர். 

Bruxism என்றால் என்ன? 

பலர், இரவில் அவர்களை மறந்து, அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென பற்களை நறநறவென கடிக்க ஆரம்பித்து விடுவர். குறிப்பாக, டீன் ஏஜ் பருவத்தினரும் இளைஞர்களாக இருப்பவர்களும் இதனை செய்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கான காரணங்களும் அதிர்ச்சியளிக்க வைக்கும் வகையில் இருக்கின்றன. 

மன அழுத்தம், மன இருக்கம் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதன் பக்கவிளைவாக கூட இது ஏற்படலாமாம். அது மட்டுமன்றி, கோபம், இயலாமை, ஏமாற்றம், சோகம், வெறுப்பு போன்ற உணர்வுகளை வெளி காட்டாமல் அவற்றை மனதிற்குள்ளேயே அழுத்தி வைத்துக்கொள்பவர்களு தூக்கத்தில் இப்படி அதிகமாக பற்களை கடிப்பார்களாம். இதனால் தலைவலி, பல் தேய்மானம், தூக்கமின்மை, பற்கள்  உடைதல், முகம் மற்றும் தாடை பகுதிகளில்வலி, தலைவலி போன்றவை உருவாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரச்சனைகள்:

பற்களை கடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

>வலி: பற்களை எப்போதும் கடித்துகொண்டு இருப்பது நம் தாடை மற்றும் தாடை கூடும் இடங்களில் அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. இதனால், அதை சுற்றியிருக்கும் தசைகள் வலுவாகி, முகம், காது பகுதி உள்ளிட்ட பகுதிகளில் வலியை ஏற்படுத்தலாம்.

>தாடை பிரச்சனைகள்: தாடை கூடும் இடங்கள், கழுத்து மற்றும் முகத்தில் இருக்கும் முக்கிய பகுதிகளிலும் கூட பற்களை அடிக்கடி கடிப்பதால் வலி ஏற்படலாம். இதனால் கடிக்கும் போது, பேசும் போது எதையாவது விழுங்கும் போது என எதை செய்தாலும் வலி ஏற்படலாம். 

>பல் உடைதல்: பற்களை கடிப்பதால் நம் பல் இருக்கும் பகுதியான எனாமல் பகுதி வலுவிழக்கிறது. இதனால் பற்கூச்சம் அதிகரித்து, பற்கள் உடையலாம். 

>ஈறுகளில் வலி: பற்களை கடிப்பதால் ஈறுகளில் வலி மற்றும் வீக்கம் உண்டாகலாம். 

>தலைவலி: பற்களை கடிக்கையில் முகம் மற்றும் தாடை பகுதியில் இருக்கும் தசைகள் பாதிப்படைகின்றன. இதனால் தலைவலியும் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

பற்களை கடிக்காமல் இருப்பது எப்படி?

>உறங்க செல்வதற்கு முன்பு மிதமான சூடு கொண்ட நீரில் குளிக்கலாம்.
>கஃபைன் பயன்பாட்டை குறைக்கவும்
>மன அழுத்தம் இருந்தால் நல்ல மன நல ஆலோசகரை அணுகவும்.
>நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
>இந்த பழக்கம் தொடர்ந்தால் உடனே பல் மருத்துவரை அணுகவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News