Lower Leg Pain: நாம் அனைவரும் அவ்வப்போது பல வித வலிகளால் அவதிப்படுகிறோம். சில பாகங்களில் எடுக்கும் வலியால் எந்த பெரிய பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால், சில பாகங்களில் ஏற்படும் வலி பல பெரிய பிரச்சனைகளின் அறிகுறிகளாகவும் இருக்கின்றன. கால்களில் முழங்கால்களுக்குக் கீழே வலி எடுப்பது பலருக்கு உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த வலியை பலர் எதிர்கொள்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடுசதையில் வரும் இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், கடுமையான வலியாகவும் இருக்கலாம். இந்த வலி நடப்பதில், ஓடுவதில், நிற்பதில் அல்லது உட்காருவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும். முழங்காலுக்குக் கீழே கால் வலி ஏற்பட காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில காரணங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமாகும். பல நேரங்களில் பலர் இந்த வலியை சாதாரண வலி என்று கருதி புறக்கணிக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இந்த வகையான வலி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். முழங்கால்களுக்குக் கீழே வலி ஏன் ஏற்படுகிறது? இதற்கான முக்கிய காரணம் என்ன? அதை எவ்வாறு தடுப்பது? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


நரம்புகளின் அழுத்தத்தால் ஏற்படும் வலி


முழங்காலில் இருந்து கீழே கால் வரை செல்லும் தசைகள் சுருக்கப்பட்டு அழுத்தம் ஏற்படும்போது, ​வலி, கூச்ச உணர்வு மற்றும் பலவீனம் ஆகியவை உணரப்படுகின்றன. இத்தகைய வலி பல காரணங்களால் ஏற்படலாம். கைகள் மற்றும் விரல்களுக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்த வலி ஏற்படக்கூடும். சில சமயங்களில் முள்ளந்தண்டு வடத்தில் உள்ள வட்டு முறிவு காரணமாக நரம்பு சுருக்கப்படுகிறது. அப்படிப்பட்ட்ட தருணங்களில் தசை திரிபு அல்லது வலி ஏற்படக்கூடும். 


தொடைப்பகுதியில் வலி


தொடைப்பகுதியில் வலி ஏற்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த சூழ்நிலையில், தொடை எலும்பின் பக்கங்களில் உள்ள தசைகள் வீக்கமடைகின்றன. இதில், காலின் முன்பகுதியில் உள்ள எலும்பில் வலி ஏற்படுகின்றது. இதன் காரணமாக, ஒருவர் நடக்கும்போதோ, ​​ஓடும்போதோ அல்லது குதிக்கும்போதோ வலியை உணர்கிறார்.


முழங்கால்களுக்கு கீழே எரியும் உணர்வு மற்றும் வலி


தசைநார் காரணமாக ஏற்படும் அழற்சி மற்றும் எரிச்சல் தசைநார் அழற்சி எனப்படுகிறது. இதில் முழங்காலுக்குக் கீழே காலில் வலி ஏற்படுகின்றது. அதிக வேலை, அடிக்கடி படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல், நீண்ட நேரம் நிற்பது ஆகிய காரணங்களால் இந்த வலி ஏற்படுகின்றது. தசைநார் அழற்சியால் காலின் கீழ் பகுதியில் ஏற்படும் வலியை ஐஸ் கட்டி கொண்டு குறைக்க முடியும். சில நேரங்களில் இதனால் அதிக வலியும் ஏற்படுவதுண்டு. வலி அதிகரித்தால் சிலர் இதற்காக அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்கிறார்கள். 


மேலும் படிக்க | Men's Health: விந்தணு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்... சூப்பர் விதைகள்


வலிக்கான பிற காரணங்கள்


- கீழ் காலின் எலும்பு முறிவால் கடுமையான வலி ஏற்படக்கூடும்.
- இதனால் வீக்கமும் ஏற்படும்.
- பாதங்களில் தொற்று ஏற்பட்டாலும் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
- மூட்டுவலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் அடிக்கடி கால்களில் வலியை அனுபவிக்கிறார்கள்.
- இவர்களுக்கு அவ்வப்போது கால்களில் வீக்கமும் ஏற்படுகின்றது.


இந்த வலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 


- முழங்காலுக்குக் கீழே காலில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.
- இதற்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சை, மருந்துகள் அல்லது பிற நடவடிக்கைகளும் அடங்கும். 
- காலின் பல்வேறு பகுதிகளில் இப்படிப்பட்ட வலியை அனுபவித்தால், கண்டிப்பாக உடனடியாக ஒரு நிபுணரைத் தொடர்பு கொள்வது நல்லது. 


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குழந்தை அறிவாளியாக - ஆரோக்கியமாக பிறக்க... கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ