பாடாய் படுத்தும் தலைவலி: இந்த நிலையை தாண்டினால் மருத்துவரை அணுகுவது அவசியம்

Headache: தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 26, 2024, 05:16 PM IST
  • தலைவலியின் வகைகள் என்னென்ன?
  • எப்படிப்பட்ட தலைவலியில் மருத்துவரை அணுக வேண்டும்?
  • எந்த விஷயங்களில் கவனம் தேவை?
பாடாய் படுத்தும் தலைவலி: இந்த நிலையை தாண்டினால் மருத்துவரை அணுகுவது அவசியம் title=

Headache: இன்றைய காலகட்டத்தில் தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலருக்கு எப்போதாவது தலைவலி வரும், சிலருக்கு எப்போதுமே தலைவலி இருக்கும். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். அது தவறு. சில நேரங்களில் தலைவலி கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். 

ஆகையால் தலைவலி ஏற்பட்டால் அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம். குறிப்பாக, எப்படிப்பட்ட தலைவலிக்கு மருத்துவரை அணுக வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம். இதற்கான பதிலை டாக்டர் ஆதித்யா குப்தாவிடமிருந்து (இயக்குநர் - நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் சைபர்நைஃப், ஆர்ட்டெமிஸ் மருத்துவமனை, குருகிராம்) தெரிந்து கொள்ளலாம்.

தலைவலியின் வகைகள் என்னென்ன?

டென்ஷனால் வரும் தலைவலி: இந்த வகை தலைவலி தலையைச் சுற்றி லேசான அல்லது மிதமான அழுத்தத்தை கொடுக்கும். யாரோ ஒருவர் தலையை இறுக்கமாகப் பிடித்திருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது பொதுவாக மன அழுத்தம், பதட்டம் அல்லது சோர்வு காரணமாக ஏற்படுகின்றது. இரவு நேரங்களில் அல்லது அதிக நேரம் வேலை செய்த பிறகு இது அதிகரிக்கலாம்.

மைக்ரேன் தலைவலி: மைக்ரேன் தலைவலியில் பொதுவாக தலையின் ஒரு பக்கத்தில் கூர்மையான, மண்டையில் துடிப்பது போன்ற கடுமையான வலி தோன்றும். இந்த வலி வந்தால், வாந்தி சங்கடம் ஏற்படலாம். அதிக ஒலி அல்லது ஒளியால் பிரச்சனை அதிகமாகலாம். ஒற்றைத் தலைவலி வந்தால், இயல்பான செயல்பாடுகளைச் செய்வது கடினமாகலாம். இது பல மணி நேரம் முதல் பல நாட்கள் வரை இருக்கக்கூடும். 

மேலும் படிக்க | இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்யும் சின்ன சின்ன விதைகள்

சைனஸ் தலைவலி: சைனஸ் வலி பொதுவாக நெற்றி, கன்னங்கள் மற்றும் மூக்கைச் சுற்றிய இடங்களில் ஏற்படும். இந்த வகையான தலைவலி சைனஸில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுநோயால் ஏற்படுகிறது. இது முகத்தில் அழுத்தத்தையும் வலியையும் ஏற்படுத்தும். இந்த வலி ஏற்படும் போது பெரும்பாலும் நாசி அடைப்பு, ஜலதோஷம் ஆகியவையும் ஏற்படும். 

எப்படிப்பட்ட தலைவலியில் மருத்துவரை அணுக வேண்டும்?

- தலைவலியில் மாற்றம் ஏற்பட்டால்: உங்கள் தலைவலியின் வடிவம் மாறினால், அதாவது ஆரம்பத்தில் லேசாக இருந்தது பின்னர் தீவிரமடைந்தால், அல்லது புதிய வகை தலைவலி ஆரம்பித்தால், மருத்துவரை அணுக வேண்டும். 

- திடீர் மற்றும் கடுமையான வலி: திடீரென தலைவலி ஆரம்பித்து மிகவும் கடுமையாக இருந்தால், அது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையில் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். 

- அடிக்கடி வரும் தலைவலி: அடிக்கடி தலைவலி வந்து, மருந்துகளால் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

- தலைவலியுடன் பிற அறிகுறிகள்: தலைவலியுடன் வாந்தி சங்கடம், மங்கலான பார்வை, பேசுவதில் சிரமம், பலவீனம், சோர்வு போன்ற மற்ற அறிகுறிகளும் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா குறைக்கும் மூலிகைகள்: இப்படி சாப்பிட்டு பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News