Men's Health: விந்தணு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்... சூப்பர் விதைகள்

குழந்தை பேறு இல்லாததற்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத தீர்வை அளிக்க உதவும் சில விதைகளை அறிந்து கொள்ளலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 1, 2024, 04:12 PM IST
  • குழந்தை பேறு இல்லாததற்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகள்.
  • விந்தணுக்களை தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிக்க செய்ய வேண்டியவை.
Men's Health: விந்தணு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும்... சூப்பர் விதைகள் title=

இன்றைய காலகட்டத்தில் தவறான வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்க வழக்கம் காரணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்குமே பாலியல் ஆரோக்கியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை காண்கிறோம். குழந்தை பேறு இல்லாததற்கு சிகிச்சை பெறும் தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்களின் பாலியல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத தீர்வை அளிக்க உதவும் சில விதைகளை அறிந்து கொள்ளலாம்.

ஆண்களின் குழந்தையின்மை பிரச்சனை கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ள சூழ்நிலையில், ஆயுர்வேத மருத்துவர்கள் சில விதைகளை சாப்பிடுவதால், ஆண்மை பிரச்சனை நிங்கும் என அறிவுறுத்தியுள்ளார். ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள சில குறிப்பிட்ட விதைகள், ஆண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனையான விந்தணு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. இவற்றை சாப்பிடுவதினால், விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை இரண்டும் மேம்படும்

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் ஜிங்க் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க இந்த சத்துகள் அவசியம். பூசணி விதை விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது. அவற்றில் மெக்னீசியம் உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியமும் (Health Tips) மேம்படும். எனவே, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளையும் தடுக்கும்.

எள் அல்லது எள்ளு

எள் விந்தணு இயக்கம் மற்றும் எண்ணிக்கையை பாதிக்கும் நொதிகளை அழிக்கும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. எள் லிக்னான்கள் விந்தணுக்களின் தரம், நினைவாற்றல் மற்றும் லிபிடோவை மேம்படுத்தும். வெள்ளை எள்ளை விட கருப்பு எள் விதைகள் சிறந்தது என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | குழந்தை அறிவாளியாக - ஆரோக்கியமாக பிறக்க... கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியவை

கடுகு

கடுகில் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன. அவை ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் பிரச்சனையை வராமல் தடுப்பதோடு, இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. விந்தணுக்களை தரம் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை பாதுகாக்கவும் உதவுகின்றன. மன அழுத்தத்தை போக்கி, மனதிற்கு நிம்மதி உணர்வையும் அளிக்கிறது.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஆளி விதைகளில் லிக்னான்கள் உள்ளன, இவை பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும், புரோஸ்டேட் மற்றும் யுடிஐ பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA), இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கிறது. 

சியா விதைகள்

சியா விதைகளை சாப்பிடுவதால் ஆண்களின் இதய ஆரோக்கியம், தசை வளர்ச்சி, நீடித்த ஆற்றல் மற்றும் ஹார்மோன் சமநிலை உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள விதைகளை சாப்பிடும் சரியான முறை

இந்த 5 விதைகளையும் லேசாக வறுத்து சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தினமும் காலை உணவுக்கு முன் அல்லது மாலையில் 1 டேபிள் ஸ்பூன் என்ற அளவில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி கொண்ட சில சுவையான சிற்றுண்டிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News