அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் என்னவாகும்? ஷாக் தரும் தீமைகள்
Excessive Lemon Water: பொதுவாக நாம், கோடையில் அதிகளவில் எலுமிச்சைப் பழத்தை உட்கொள்கிறோம். ஆனால் சில மருத்துவ பண்புகள் காரணமாக, இந்த எலுமிச்சைப் பழத்தை நாம் அனைத்து பருவத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் குடிக்கிறோம். ஆனால் இதில் சில தீமைகள் உள்ளன. அவை என்ன என்பதை அறிந்துக்கொள்வோம்.
எலுமிச்சை ஜூஸால் வரும் பக்க விளைவுகள்: நமது ஆரோக்கியத்திற்கு எலுமிச்சைப் பழம் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். காலையில் எழுந்த பிறகு நீங்கள் எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் குடித்தால், உடல் எடை இழக்கத் தொடங்கும். இதனுடன், எலுமிச்சை நமது செரிமானத்தில் மிகவும் உதவியாக இருப்பதை நிரூபிக்கிறது, இது வயிறு தொடர்பான பல பிரச்சினைககளுக்கு ஒரு அற்புத தீர்வாகும். எலுமிச்சைப்பழத்தை ஒரு பல்நோக்கு பழம் என்றே கூறலாம். சருமம், முடி மற்றும் ஒப்பீட்டளவில் முழு உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் ஒரு பழமாக அறியப்படுகிறது என்றாலும் கூட இந்த புளிப்புச் சுவையுடைய பழம் நமக்கு சில அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? பல நன்மைகளை உள்ளடக்கிய எலுமிச்சம் பழத்தின் பக்க விளைவுகளை பற்றியே நாம் இங்கே பார்க்க போகிறோம்.
அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் என்ன தீமைகள் உண்டாகும்
பல உறுப்புகள் சேதமையடையலாம்
எலுமிச்சை வைட்டமின் சி இன் ஒரு வளமான மூலமாகும், நம் உடலில் இந்த ஊட்டச்சத்தின் அளவு அதிகரித்தால், அது பல முக்கியமான உறுப்புகளை பாதிக்கும், எனவே பல மருத்துவர்கள் அதை அளவில் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க | Running Tips: ஓடிய பிறகு இதை சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்..!
1. வயிற்று வலி
வெறும் வயிற்றில் தேனுடன் கலந்த்து எலுமிச்சை நீரை உட்கொள்வது செரிமான செயல்முறைக்கு உதவும் என்று நாம் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். இருப்பினும், அதிகப்படியான எலுமிச்சை சாறு வயிற்றை சீர்குலைக்கும், மேலும் இது செரிமான செயல்முறையையும் குறைக்கும், இது வயிற்று வலியையும் ஏற்படுத்தும்.
2. வாய் கொப்புளங்கள்
எலுமிச்சை காரணமாக பல முறை, வாய் மற்றும் பற்களின் வாசனை சுத்தம் செய்யப்படுகிறது, ஆனால் நீங்கள் அதிகப்படியான எலுமிச்சைப் பழத்தை குடித்தால், அதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் வாய்வழி திசுக்களில் வீக்கத்தை ஏற்படுத்தும், இது வாய் கொப்புளங்களையும் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
3. பல் அரிப்பை ஏற்படுத்தும்
எலுமிச்சை சாற்றில் அதிக அமிலத்தன்மை உள்ளது. எனவே ஒரு எலுமிச்சையில் சாறு அதிகமாக இருக்கும்போது, அது உங்கள் பற்களில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது காலப்போக்கில் பல் சிதைவையும் ஏற்படுத்தும். இங்கே பல் அரிப்பு என்பது கனிமமயமாக்கப்பட்ட பல் பொருட்களின் வேதியியல் இழப்பு ஆகும். எனவே, உங்களுக்கு சென்சிடிவ் ஆன பற்கள் இருந்தால் நீங்கள் எலுமிச்சை போன்ற சிட்ரிக் உணவுகளை உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ