நமது உடலுக்கு எந்த உணவுகள் ஆரோக்கியமானவை, எது ஆரோக்கியமற்றது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசியம் மிகவும் முக்கியமானது. நீங்கள் பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல உங்களுக்கு ஏதாவது நோய், உடல் உபாதை இருந்தாலும் குறிப்பிட்ட சில  உணவுகளை தவிர்க்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழே உங்களுக்கு சில ஆரோக்கியமற்ற (unhealthy foods) மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக ஆரோக்கியமற்ற 5 உணவுகள் இங்கே உள்ளன. இருப்பினும் தங்கள் உடல்நலத்திற்கு எந்தவித சேதம் ஏற்படாதவாறு சில சந்தர்ப்பங்களில் அவற்றை மிதமாக சாப்பிடலாம். ஆனால் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. 


சர்க்கரை பானங்கள் (Sugary drinks)
நவீன உணவில் சர்க்கரை பானங்கள் மிக மோசமான உணவு பொருட்களில் ஒன்றாகும். இருப்பினும், உடலுக்கு சர்க்கரை முக்கியமானது என்றாலும், குறிப்பாக சர்க்கரை பானங்கள் தீங்கு விளைவிக்கும். நீங்கள் திரவமாக கலோரிகளை குடிக்கும்போது, உங்கள் மொத்த கலோரி அளவு அதிகரிக்கும். 


சர்க்கரை பானங்கள் மிகவும் கொழுப்பு நிறைந்த பொருளாகும். மேலும் அவற்றை அதிக அளவில் குடிப்பதால் கொழுப்பு அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படலாம்.


சர்க்கரை அதிக அளவில் உட்கொள்ளும்போது, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு தீவிர நோய்க்கு வழிவக்கும். 


மாற்று
அதற்கு பதிலாக தண்ணீர், சோடா நீர், காபி அல்லது தேநீர் குடிக்கவும். எலுமிச்சை துண்டுகளை தண்ணீர் அல்லது சோடா நீரில் சேர்ப்பது சுவையை அதிகரிக்க செய்யும் மற்றும் உடலுக்கு நல்லது. 


ALSO READ | Eggs on Brain Health: முட்டையின் சூப்பர் சத்துக்கள் என்ன தெரியுமா?


பீட்சாக்கள் (pizzas)
உலகின் மிகவும் பிரபலமான ஜங் புட்களில் ஒன்று பீட்சா. பெரும்பாலான வணிக பீட்சாக்கள் ஆரோக்கியமற்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி இருக்கும். பீட்சாவில் கலோரிகளில் மிக அதிகமாக இருக்கும்.


மாற்று:
சில உணவகங்கள் ஆரோக்கியமான பீட்சா வழங்குகின்றன. உங்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும் வரை, வீட்டில் தயாரிக்கப்பட்ட பீட்சாக்களும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.


அதிகமான பழச்சாறுகள் (most fruit juices)
பழச்சாறு பெரும்பாலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பழச்சாற்றில் சில ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது அதிக அளவு திரவ சர்க்கரையை உடலுக்குள் செலுத்துகிறது. 


உண்மையில், பழச்சாறு கோக் அல்லது பெப்சி போன்ற சர்க்கரைப் பானங்களைப் போலவே சர்க்கரையின் அளவு அதிகமாக கொண்டுள்ளது. சில சமயங்களில் இன்னும் அதிகமாக இருக்கும். கவனமாக இருக்கவும்.


மாற்று:
சில பழச்சாறுகளில் சர்க்கரையில் அளவு குறைவாக இருக்கிறது. அதன் பழச்சாறுகள் சாப்பிடலாம். மாதுளை மற்றும் புளூபெர்ரி போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் உடலுக்கு நன்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகப்படியான பழச்சாறுகள் அருந்தக்கூடாது.


ALSO READ | Side Effects of Almond: இவர்கள் பாதாம் பருப்பை உட்கொள்ளக்கூடாது


பிரெஞ்சு பிரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் (French fries and potato chips)
வேகவைக்கப்பட்ட முழு வெள்ளை உருளைக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமானது. இருப்பினும், பிரெஞ்சு பிரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. இந்த உணவுகளில் கலோரிகள் மிக அதிகம். பல ஆய்வுகள் மூலம் பிரெஞ்சு பிரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. 


இந்த உணவுகளில் அதிக அளவு அக்ரிலாமைடுகளும் இருக்கலாம். எனவே புற்றுநோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மாற்று:
உருளைக்கிழங்கு நன்றகா வேகவைத்து சாப்பிடுங்கள். உருளைக்கிழங்கு சிப்ஸ்-க்கு பதிலாக கேரட் சாப்பிடலாம். அதிகமாக விருப்பம் இருதால், குறைந்த அளவு சாப்பிடலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.


மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் (most highly processed foods)
ஆரோக்கியமான உணவை உட்கொள்வதற்கும் எடை குறைப்பதற்கும் எளிய வழி, பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது. பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் தொகுக்கப்பட்டு அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரை கலக்கப்படுகிறது.


மாற்று:
வீட்டிலேயே சமைத்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏராளமான காய்கறிகளும் பிற உணவுகளும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். 


ALSO READ | Chickoo Benefits: சப்போட்டா பழத்தின் நன்மைகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR