Bone Health: வயதான காலத்தில் எலும்புகள் பலவீனம் அடைவது சகஜம் தான். இருப்பினும் சில உணவு பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறைகள் முதுமைக்கு முன்பாகவே தளர்வடையச் செய்து விடுகிறது. இதனால் பல நோய்களின் கூடாரமாக உடல் மாறி விடுகிறது. இதனை தடுக்க நாம் எத்தகைய உட்கொள்கிறோம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதைத் தான் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலும்பு பலவீனம் அடைவதைத் தடுக்க தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்கள்:


பலவீனமான எலும்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும், எலும்பு முறிவுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். இந்நிலையில், உங்கள் எலும்பு அமைப்பில் தீங்கு விளைவிக்கும் உணவுகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது மிக முக்கியம். 


சோடா பானங்கள்


வயிறு அஜீரணம் இருந்தால் சோடா குடித்தால் சரியாகிவிடும் என்று சிலர் கருதுகின்ற சிலர் கோலா குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் சோடாவில் பாஸ்பரஸ் அமிலம் அதிகமாக உள்ளது. இதனை அதிகம் உட்கொள்வதால் கால்சியத்தை கிரகிக்கும் தன்மையை உடல் இழந்து வருகிறது. கால்சியம் குறைந்தால் எலும்பு பலவீனம் ஆகிவிடும். இதனை தவிர்க்க தண்ணீர் மூலிகை தேநீர் செயற்கை இனிப்பு சேர்க்கப்படாத பானங்களை அருந்தலாம்.


அளவிற்கு அதிகமான உப்பு


என்ன தான் உணவுக்கு ருசி இருந்தாலும், உப்பை அளவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அதிகம் சேர்ப்பதால் ரத்த கொதிப்பு மட்டுமல்ல இதிலுள்ள சோடியம் உடலில் அதிகமாக சேர்ந்தால் சிறுநீரோடு கால்சியமும் வெளியேறிவிடும். இதுபோல் பதப்படுத்த பட்ட உணவுப் பொருட்களில் இருப்பதால் அதையும் தவிர்ப்பது நல்லது.


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை: இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்!!


அளவிற்கு அதிகமான சர்க்கரை


அளவுக்கு அதிகமாக சர்க்கரை உட்கொள்வது எலும்பின் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையானதாக ஆகி விடும். இதற்கு பதிலாக பழங்கள், தேன் போன்ற இயற்கையாகவே இனிப்பு நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.


அளவிற்கு அதிகமான காபின்


காலையில் எழுந்ததும் காபி குடிப்பது பலரது வழக்கமாக உள்ளது. காபி மட்டுமல்ல வேறு சில பொருட்களிலும் நமக்குத் தெரியாமலேயே காபின் கலந்துள்ளது. காபின் அதிகமாக உட்கொண்டால் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறைந்துவிடும். 


ஆல்கஹால்


மது அருந்துவது உடலுக்கு நல்லதல்ல. கல்லீரல் பாதிப்பு உட்பட பல பிரச்சினைகளை உருவாக்கி உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஆல்கஹால் அதிகம் உட்கொள்வதால் கால்சியம் சமநிலை பாதிக்கப்படுகிறது. எலும்புத் துறை உருவாகவும் காரணம் ஆகிவிடுகிறது.


மாமிச உணவுகள்


சில பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகளில் உப்பு அதிகம் சேர்ப்பதால் சோடியம் மட்டுமின்றி கெட்ட கொழுப்புகளும் அதிகம் ஆகி விடுகிறது. 


ஆக்சலேட் உணவுகள்


கீரை போன்ற அதிக ஆக்சலேட் உள்ள உணவுகள் கால்சியம் குறிக்கும் தன்மையை குறைப்பதோடு சிறுநீரக கற்கள் உருவாகவும் வழிவகுத்து விடும். எனவே இவற்றை அளவோடு எடுத்துக் கொண்டு கால்சியம் நிறைந்த பொருட்களை சேர்த்து சமநிலைப்படுத்த வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தயிர் சாதம்..... சுவையிலும் ஆரோக்கிய நன்மைகளிலும் டாப் டக்கர்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ