உடல் எடை குறைப்பு என்பது அனைவரின் கனவாகவும் மாறிவிட்டது என்றே சொல்லும் அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்துவிட்டது. ஆனால், துரிதமாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் எப்போதும் பிரபலமாக பேசபப்ட்டாலும், நீண்ட நாட்கள் தொடர முடியாதவை. பெரும்பாலும், இந்த உணவுகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் பல உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த உணவுமுறைகள் நிலையானவை அல்ல என்பதால், இறுதியில் உடல் எடையை குறைக்கும் எண்ணத்தில் தொடங்கிய உணவு முறை மாற்றமே, முன்பு இருந்ததை விட அதிக எடையை கொடுத்துவிடும் என்றும் பலரும் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, தீவிர உடல்நல விளைவுகளைத் தவிர, இது ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.


எடை இழப்புக்கு (Weight Loss Tips) அல்லது உடல் பருமனுக்கு வழிவகுக்கும் இரண்டு பொதுவான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் என்பது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் ஆகும். ஒரு ஆய்வின்படி , கிட்டத்தட்ட 135 மில்லியன் இந்தியர்கள் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் உடல் பருமனாக உள்ளனர். 


இந்த நிலையில், அவசரமாக அல்ல நிதானமாக ஆனால் நிலையாக உடல் எடை குறைக்கும் வழிகள் ப்ளூ ஜோன் டயட் (Blue Zone Diet) பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உணவு வழக்கத்தில், 95% பச்சை, இலை காய்கறிகள் உள்ளன. இவற்றில் கலோரிகள் குறைவு ஆனால் நார்ச்சத்து அதிகம். அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகின்றன, உங்கள் எடை இழப்பு பயணத்தின் போது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன.


மேலும் படிக்க | அறிவாற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டிய ‘8’ விஷயங்கள்!


நீல மண்டல உணவுமுறை என்றால் என்ன? (What is Blue Zone Diet) எடையைக் கட்டுப்படுத்த எப்படி உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


ப்ளூ ஜோன் என்பது உலகெங்கிலும் உள்ள 5 இடங்களைக் குறிக்கிறது, அங்கு குடியிருப்பவர்கள் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர். இதில் இகாரியா (கிரீஸ்), ஒகினாவா (ஜப்பான்), சர்டினியாவின் ஓக்லியாஸ்ட்ரா மாகாணம் (இத்தாலி), லோமா லிண்டா (கலிபோர்னியா) மற்றும் நிக்கோயா தீபகற்பம் (கோஸ்டாரிகா) ஆகிய இடங்களில் உள்ள அட்வென்டிஸ்ட் சமூகங்கள் அடங்கும்.


இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உணவுப் பழக்கத்தால் ஈர்க்கப்பட்டு, நேஷனல் ஜியோகிராஃபிக் ஃபெலோ மற்றும் எழுத்தாளர் டான் பெட்னர் ப்ளூ சோன்ஸ் டயட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இது முக்கியமாக அங்கு வாழும் மக்கள் உண்ணும் உணவுப் பொருட்களை உள்ளடக்கியது, இந்த டயட், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்கவும் நீண்ட நேரம் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.


95% பச்சை இலை காய்கறிகள் உள்ளன. இவற்றில் கலோரிகள் குறைவு ஆனால் நார்ச்சத்து அதிகம். அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குவதால் எடை இழப்பு பயணத்தின் போது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பராமறிக்கப்படுகின்றான.


மேலும் படிக்க | ஒல்லியான உடல் வாகை பெற... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ தானியங்களுக்கு மாறுங்க!


காய்கனிகள் & பருப்பு வகை


இலை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இரத்த சர்க்கரை அளவை சீராக்குவதுடன், விரைவில் பசி எடுக்காமல் தடுக்கிறது. உங்கள் உணவில் கீரைகள் மற்றும் பருப்பு வகைகளைச் சேர்ப்பதன் மூலம், சீரான, சத்தான உணவைப் பராமரிக்கும் போது எடையைக் குறைக்கலாம்.


நீல மண்டலத்தில் வாழும் மக்கள் முழுமையான உணவுப் பழக்கத்தை நம்புகிறார்கள். அதிக எண்ணெய் மற்றும் தானியங்களை குறைத்து உண்பதுடன், எண்ணெயில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துகின்றனர்.  


தண்ணீருக்கு முன்னுரிமை 
நீங்கள் எந்த உணவில் இருந்தாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் முக்கியம். எனவே, ப்ளூ ஜோன் டயட்டில் இருந்தால், சர்க்கரை அல்லது சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்த்து, நீர் வடிவில் அதிக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், பதப்படுத்தப்பட்ட சாறுகள், குளிர்பானங்கள் மற்றும் செயற்கை சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும். இந்த உணவுமுறையை முயற்சித்து உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்கலாம்.


(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | முருங்கையை எந்த நேரத்தில இப்படி சாப்பிட்டா, ’அந்த’ எஃபக்ட் சூப்பரா இருக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ