Lose weight with lemon: உடல் பருமனால் பிரச்சனையா? உடல் எடையை நீங்கள் குறைக்க நினைத்தால், எலுமிச்சை உங்களுக்கு உதவும். ஆம், எலுமிச்சையின் சுவை புளிப்பாக இருந்தாலும், இது ஆரோக்கியத்திற்கு பல இனிப்பான நன்மைகளை தரக்கூடியது. அதன் வழக்கமான பயன்பாட்டின் மூலம், விரைவாக உடல் எடையை குறைக்கலாம். எலுமிச்சம் பழத்தில் உள்ள கலோரிகள் மிகவும் குறைவு என்பது இதன் சிறப்பம்சமாகும். எலுமிச்சம்பழச் சாற்றை குடிப்பதால், உடலில் உள்ள கூடுதல் கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, எடையும் எளிதில் குறையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது


லெமனேட் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கிய நலன்களுக்கான (Healthy Body) எளிதான தீர்வாகும். இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.


எடை இழப்பு பற்றி ஆயுர்வேத மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்?


நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானியின் கூற்றுப்படி, உணவுப் பழக்கத்தை சீராக்குவதால், வளர்சிதை மாற்றம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல், தொப்பையும் குறைகிறது. இதன் காரணமாக, எடையும் கட்டுப்படுத்தப்பட்டு, உடல் மெலிதாகத் (Weight Reduction) தோன்றும். இதற்கு பின்வரும் வழிகளில் எலுமிச்சையை உணவில் பயன்படுத்தலாம்.


ALSO READ: Weight Loss: நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்... 


எடை இழப்புக்கு இந்த வழியில் எலுமிச்சையை பயன்படுத்தவும்


- எடை இழப்புக்கு எலுமிச்சை தேநீர் பயனுள்ளதாக இருக்கும். ஒரு கப் டீயில் 2-3 துளி எலுமிச்சைச் சாறைப் பிழிந்து குடிப்பது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.


- காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இது செரிமான செயல்முறையை நன்றாக வைத்திருக்கும், சருமத்தில் நல்ல விளைவை ஏற்படுத்தும்.


- சாலட்டில் எலுமிச்சையை (Lemon) பிழிந்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உங்களுக்கு சுவையைத் தருவது மட்டுமல்லாமல், விரைவாக எடையைக் குறைக்கவும் உதவும்.


- தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். எலுமிச்சம் பழத்தை தேனுடன் கலந்தும் குடிக்கலாம். இது தவிர வெள்ளரிக்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் எடை விரைவில் குறையும்.


எலுமிச்சை கொழுப்பையும் அகற்றுகிறது


எலுமிச்சை உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரித்து, எடையை எளிதில் குறைக்கிறது. மேலும், இது தசைகளை தொனிக்கவும் தொப்பையை குறைக்கவும் உதவுகிறது.


குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்று அல்ல. இது கல்வி நோக்குடம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.


ALSO READ:Raisin Water: நீரில் ஊற வைத்த உலர் திராட்சையின் அற்புத நன்மைகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR