ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா? இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்

கல்லீரல் சரியாக பணிபுரியவில்லை என்றால், அது பலவித உடற் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் உள்ளன.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2021, 02:18 PM IST
  • கல்லீரல் செயலிழப்பு காரணமாக, உடலில் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
  • வெங்காயம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
  • பீட்ரூட்டை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா? இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்  title=

நம் உடல் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்க, உடலின் அனைத்து பாகங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான கல்லீரல் முக்கியமானதாகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், நீங்கள் பல வயிற்று பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். 

உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, நொதிகளை செயல்படுத்துவது என கல்லீரல் பல விதங்களில் செயல்படுகிறது. 

கல்லீரல் சரியாக பணிபுரியவில்லை என்றால், அது பலவித உடற் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கல்லீரல் சரியாக வேலை செய்யாததற்கு பல காரணங்கள் உள்ளன. 

வறுத்த பொறித்த உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், அதிகமாக புகைபிடித்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். கல்லீரல் செயலிழப்பு காரணமாக, உடலில் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகளை பற்றி இங்கே காணலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டை (Beetroot) உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் செய்ய உதவும்.

கிரீன் டீ
கிரீன் டீ கல்லீரலுக்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற உதவும். நாள் முழுவதும் 2-3 கப் கிரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ALSO READ: Men's Health: ஆண்களின் ஆரோக்கியத்திற்கான ‘சூப்பர்’ உணவுகள்..!! 

எலுமிச்சை

எலுமிச்சையின் (Lemon) உதவியுடன் கல்லீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்றலாம். இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் சி-யும் எலுமிச்சையில் ஏராளமாக காணப்படுகின்றன. இவை உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.

கேரட்

கேரட்டில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்தையும் குறிப்பாக கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குளுதாதயோன், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் கேரட்டில் காணப்படுகின்றன.

வெங்காயம்

வெங்காயம் (Onion) சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெங்காயத்தில் கந்தகம், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகள் உள்ளன. அவை கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றும். 

பூண்டு
பூண்டு கல்லீரலுக்கு மிகவும் நல்லது. பூண்டில் ஆண்டியாக்சிடெண்டுகள், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ALSO READ:Vitamin B12 குறைபாட்டை சாதாரணமாக எண்ண வேண்டாம்; எச்சரிக்கை தேவை..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News