யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடக் கூடாது? நீங்க லிஸ்ட்ல இருக்கீங்களா?
Gooseberry Disadvantages: இந்த 5 பிரச்சனைகளுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், நெல்லிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவும்.
நெல்லிக்காய் ஆரோக்கிய ஆபத்து: நெல்லிக்கயில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியத்திற்கும் முடி மற்றும் சருமத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது உலகின் பல பகுதிகளில் உட்கொள்ளப்படுகிறது. நெல்லிக்கயில் இது போன்ற பல குணங்கள் மறைந்துள்ளன, இது பல உடல் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்க உதவும். ஆனால் இதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவில் தீமைகளும் உள்ளது. எனவே இந்த 5 பிரச்சனைகளுடன் நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், நெல்லிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் அல்லது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ளவும்.
இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்
1. சிறுநீரகக் கல்லின் வரலாறு: உங்களுக்கு சிறுநீரகக் கல் பிரச்சனை இருந்திருந்தால் அல்லது தற்போது இந்தப் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருந்தால், நீங்கள் நெல்லிக்காய் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். ஏனெனில் நெல்லிக்காயில் ஆக்சலேட் அதிகமாக உள்ளது, இது எளிதில் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவதற்கு பங்களிக்கும்.
மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா... காலி வயிற்றில் ‘இவற்றை’ சாப்பிடாதீங்க!
2. மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள்: நெல்லிக்காய் சில மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். இரத்தத்தை மெலிக்கும் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகள் இதில் அடங்கும். நீங்கள் ஏதேனும் உடல் பிரச்சனைக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், நெல்லிக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
3. இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்கள்: நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும், எனவே இரத்தச் சர்க்கரைக் குறைவு உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். நீங்கள் இரத்தச் சர்க்கரைக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது இரத்தச் சர்க்கரைக் குறைவு அபாயத்தில் இருந்தால், நெளிக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
4. ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள்: நெல்லிக்காய் உங்களுக்கு எதிர் விளைவை ஏற்படுத்தினால் அல்லது அதை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவதாக உணர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே நெல்லிக்காயை உட்கொள்ள வேண்டும்.
5. கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்கள்: நெல்லிக்காய் பொதுவாக கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதன் பாதுகாப்பு குறித்து போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது பாலூட்டும் பெண்ணாக இருந்தால், நெல்லிக்காயை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுக வேண்டும்.
(பொறுபுத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை அதிகரிப்பதால் கவலையா? இந்த ஜூஸ் குடிங்க, உடனடி பலன் தெரியும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ