Neem Bad Side: அமிர்தமே நஞ்சாகும்: இது வேப்பிலை சொல்லும் தத்துவம்
Neem Side Effects: புற்றுநோய் கிருமிகளையும் கடுப்படுத்தும் என வேப்பிலையின் மருத்துவ பண்புகள் பட்டியலுக்குள் அடங்காதவை என்றாலும் மருந்தே நோயாகும் என்பதற்கும் உதாரணமாக இருக்கிறது வேப்பிலை
சென்னை: பூமியில் வேறு எந்தத் தாவரத்திற்கும் இல்லாத அளவுக்கு புரிந்துகொள்வதற்குக் கடினமான உட்கூறுகளைக் கொண்டது வேப்பிலை. வேப்பிலை நமது உடலை சுத்தம் செய்கிறது. தொற்று நோய் ஏற்பட்டாலும், அம்மை போன்ற கொடிய நோய்களுக்கும் வேப்பிலையே அருமருந்து. வேப்பிலை உடலுக்கு சக்தியூட்டக்கூடியது என்பதுடன் அது உடலை சுத்திகரிக்கவும் செய்கிறது. வேப்பிலை அற்புத மருத்துவ குணங்களையும், பிராண சக்தியின் பலமான அதிர்வுகளையும் கொண்டது.
உடலிலுள்ள புற்றுநோய் அணுக்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் கட்டுப்படுத்துவதால், புற்றுநோய் கிருமிகளையும் கடுப்படுத்தும் என வேப்பிலையின் மருத்துவ பண்புகள் பட்டியலுக்குள் அடங்காதவை.
ஆனால், அளவுக்கு மிஞ்சினால் மருந்தே நோயைக் கொடுக்கும் என்பதுபோல, வேப்பிலையையும் அளவாக பயன்படுத்த வேண்டும். சிலர், சில சந்தர்ப்பங்களில் வேப்பிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | அரிசியில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
வேம்பின் சாறு விலங்கு குறித்த ஆய்வில், இது கருப்பையை சுருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கருத்தரிக்கும் எதிர்பார்ப்பில் இருப்பவர்களும், கருவுற்ற பெண்களும் வேம்பின் பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
வேப்பிலை பயன்படுத்தும்போது, அது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிவேகமாக மாற்றக்கூடும் என்றும் சில ஆய்வுகள் சொல்கின்றன.
ஆனால் விந்தணுக்களை நிராகரிக்கும் தன்மையையும் கொண்டிருக்கலாம் என்பதால் கரு தரிக்க விரும்பும் பெண்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் கரு தரிப்பு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்க்ரள் வேம்பின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகத்தை பாதிக்கலாம்
வேப்பிலை உட்கொள்வது சிறுநீரக பாதிப்புக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும் கவனமாக இருப்பதும் முக்கியம். மூலிகை மருந்துகளை சாப்பிடுபவர்கள், வேப்பிலையை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அதேபோல, வேப்பம் பூவை அதிகமாக உட்கொள்வது கல்லீரலையும் சேதப்படுத்தும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது, இது தொடர்பான ஆய்வு முடிவுகள் இல்லை என்றாலும், உடல் நல பிரச்சனை கொண்டவர்கள் வேப்பிலை எடுத்துகொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
மேலும் படிக்க | உடலில் கால்சியத்தை விரைவில் காலி செய்யும் உணவுகள்
வேம்பில் இருக்கும் ஹைபோடென்சிவ் விளைவுகள் இரத்த சர்க்கரையை குறைப்பதற்கான மருந்துகளை எடுப்பவர்களுக்கு தீமையை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
வேப்பெண்ணெய் குழந்தைகளுக்கு ஆபத்து
வேப்பெண்ணெய் குழந்தைகளுக்கு கொடுப்பது ஆபத்தில் முடியலாம். அதேபோல, வேப்பிலை மற்றும் வேப்பஞ்சாற்றை நீண்ட காலம் எடுத்துகொள்ள கூடாது. ஏனெனில் வேப்பிலை சாறை நீண்ட காலம் எடுத்துக் கொண்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
அருமருந்தாய் இருந்தாலும், அதை அளவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. அதிலும் உடலுக்கு நல்லது என்று நினைத்து தவறான பழக்கத்தை மேற்கொள்வது ஆரோக்கியத்தை புரட்டி போட்டுவிடும்.
மேலும் படிக்க | காயாக இருந்தால் நீரிழிவுக்கு மருந்து! பழுத்தால் சர்க்கரையை அதிகரிக்கும் மாயப்பழம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ