புதுடெல்லி: ஒவ்வொரு உணவுக்கும் ஒரு குணாதியம் உண்டு. எவ்வளவு தான் சத்தான உணவாக இருந்தாலும், அவற்றை அனைவருமே சாப்பிட முடியாது. உணவு என்பது ஆரோக்கியத்தைக் கொடுப்பது என்றாலும், ஒரே விதமான உணவு அனைவருக்கும் ஏற்றதல்ல, சில வகை உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும் என்றால், சில உணவுகளை கட்டாயம் உண்ண வேண்டும். ஒரு சில உணவு பதார்த்தங்களை அளவுடன் உண்ண வேண்டும். இப்படி, ஒருவரின் நோய், உடல் அமைப்பு, வயது ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் உணவு உண்ண வேண்டும். இந்த வகையில், சில வகை உணவுகள் பொதுவாக அனைவரின் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதும், அவை எவை என்பதும் தெரியுமா?
உடலில் உள்ள எலும்புகளை எவ்வாறு பராமரிப்பது? எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். சில நேரங்களில், நமது அன்றாட பழக்கவழக்கங்களே நமக்குத் தெரியாமலேயே எலும்புகளை பாதிக்கலாம். எலும்பு ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவுகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம். இவை நமது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளவை.
மேலும் படிக்க | அரிசியில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்
சோடா மற்றும் குளிர்பானங்கள்
குளிர்பானங்களை விரும்பி பருகுபவர்களா? குளிர்பானத்தை குடிப்பதற்கு முன்பு, அது ஆரோக்கியத்திற்கு மோசமானதா இல்லையா என்று அறிந்துக் கொள்ளுங்கள். குளிர்பானங்களில் சர்க்கரை மற்றும் காஃபின் நிறைந்திருந்தால் அவற்றை தவிர்க்கவும். பெரும்பாலான குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்பட்டிருக்கும். இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை கரைத்துவிடும், அதனால் உங்கள் எலும்பின் வலு விரைவில் குறைந்துவிடும்.
விலங்கு புரதம்
அதிகப்படியான விலங்கு புரதங்களை உட்கொள்வதும் ஆபத்தானது. அது, சிறுநீரில் கால்சியத்தை வெளியேற்றிவிடும்.
காஃபின்
நாம் தினசரி பருகும், தேநீர், கோகோ, சாக்லேட் மற்றும் காபி போன்ற பானங்களில் உள்ள காஃபின், கால்சியத்தை அதிக அளவில் வெளியேற்றிவிடும். எனவே இந்த பானங்களை அதிகம் குடிக்காமல் இருப்பது நல்லது.
புகையிலை மற்றும் புகைப்பிடித்தல்
புகைபிடிப்பவர்களும் புகையிலையை பயன்படுத்துபவர்களும் உடனடியாக அவற்றை நிறுத்துவது நல்லது. புகைபிடித்தல் மற்றும் புகையிலை மெல்லுதல் போன்றவற்றால், கால்சியம் உடலில் சேராது. அதாவது, நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சிய சத்தை உடல் கிரகித்துக் கொள்வதை நிகோடின் பாதிக்கிறது என்பதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும்.
அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை
உங்கள் உணவில் சர்க்கரை அல்லது உப்பு அதிகம் சாப்பிடுகிறீர்களா? இந்த இரண்டின் அதிகப்படியான நுகர்வு கால்சியத்தை விரைவில் கரைக்கிறது.
வாழ்க்கை முறை
உட்கார்ந்தே வேலை செய்பவர்களின் வாழ்க்கை முறை, உடலில் கால்சியம் சத்து இருப்பை குறைக்கிறது. நடைபயிற்சி, ஓட்டம் அல்லது ஜாகிங் போன்ற உடல் செயல்பாடுகளையும் தொடங்கினால், அது எலும்பு பலவீனம் ஆவதைத் தடுக்க உதவுகிறது.
மேலும் படிக்க | காயாக இருந்தால் நீரிழிவுக்கு மருந்து! பழுத்தால் சர்க்கரையை அதிகரிக்கும் மாயப்பழம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ