Medicinal Properties of Curry Leaves: உணவுக்கு மனம் சேர்க்கும் கறிவேப்பிலையின் நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. அதனால் அதை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த செய்தியை படித்தால், தூக்கி எறிவதற்கு நீங்கள் நிச்சயம் தயங்குவீர்கள். எண்ணற்ற ஆரோக்கிய நலன்களையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்ட கறிவேப்பிலை, பலவகை நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை ஏராளம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் கறிவேப்பிலை தென்னிந்திய சமையலில் இன்றியமையாத இடம் பெற்றுள்ள ஒரு பொருள். கறிவேப்பிலை தாளிதம் செய்யாத உணவு ருசிப்பதில்லை. கறிவேப்பிலையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ஆகியவை நோய்கள் அண்டாமல் (Health Tips) நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும்.


வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்


நீரழிவு நோயை கட்டுப்படுத்த கறிவேப்பிலை சிறப்பாக செயல்படும். கிளைசிமி குறியீடு மிகவும் குறைவாக கொண்ட கறிவேப்பிலை, இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.


செரிமான பிரச்சனையை போக்கும் கறிவேப்பிலை


வாயு நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்சனை இருப்பவர்கள், தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரித்து, குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | சாக்லேட் மட்டுமல்ல... பிஸ்கட்டும் விஷம் தான்... எச்சரிக்கும் நிபுணர்கள்


இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கருவேப்பில்லை


மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயத்தை அதிகரிக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வைக்க, கறிவேப்பிலையில் உள்ள நார் சத்து உதவும். மேலும் இதில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக காணப்படுவதால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்பும் உள்ளது. இதனால் ரத்த ஓட்டம் உடலில் சீராக இருக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கறிவேப்பிலை


கறிவேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவை அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நோய்கள் அண்டாமல் நமது உடல் பாதுகாக்கப்படும். இதில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் நோய்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.


இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவும் கறிவேப்பிலை


சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள், பருக்கள் மட்டுமல்லாது, சரும பிரச்சனைகள் நீங்கவும் கறிவேப்பிலை உதவும். ஏனெனில் கறிவேப்பிலையில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் இ உள்ளது.


கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கறிவேப்பிலை


கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால் கண்ணா ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வை பிரச்சனை ஏற்படுவதையும், கண்புரை ஏற்படவதையும் தடுத்து கண்களை பாதுகாக்கிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை... கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ