Ayurveda: தொண்டை நோய்களை குணப்படுத்தும் கண்டங்கத்தரி
கத்தரிக்காய்க்கு மருத்துவ பயன்கள் உண்டு என்றால், கத்தரி வகையில் ராணியாக கிரீடம் சூடுவது கண்டங்கத்திரி
சென்னை: மூலிகை வகைகளில் முக்கியமானது கண்டங்கத்தரி. பொதுவாக, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் தானாக தளதளவென்று வளரக் கூடிய கண்டங்கத்திரி செடி முட்கள் நிறைந்தது.
கண்டங்கத்திரியின் பூக்கள் நீல நிறத்தில் இருக்கும், இதன் காயானது, சிறிய கத்தரிக்காய் வடிவில் இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
சித்த மருந்துகளில் புகழ் பெற்றது தச மூலம். இது, பத்து வகையான மூலிகைகளின் வேர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தச மூலத்தில் ஒரு மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது கண்டங்கத்தரி.
ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி, தூதுவளை என மூன்று இலைகளையும் தண்ணீரில் போட்டு சுண்ட காய்ச்சவேண்டும். ஒரு பங்கு தண்ணீர், அரை பங்காகும் அளவு சுண்டக் காய்ச்சவேண்டும். பிறகு அதை வடித்து சாறாக உட்கொண்டு வந்தால் ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குணமாகும். பின் விளைவுகளே இல்லாத இயற்கை மருத்துவம் இது.
Also Read | ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா? இந்த உணவுகள் உங்களுக்கு உதவும்
கண்டங்கத்திரி பழத்தை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டி, புகை பிடித்தால், பல்வலி, பல் கூச்சம் தீரும்.
கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வந்தால் அது பிரச்சனைகளை சீர்செய்யும்.
முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசப் பிரச்சனைகளை குணப்படுத்துபவை. எனவே, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை என மூன்று மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கில், அதனை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.
Also Read | Health Warning! பண்டிகை காலம் இது! எச்சரிக்கை!
கண்டங்கத்திரி வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 5 கிராம், கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அரை லிட்டராக காய்ச்சி 4 முதல் 6 முறை 100 மில்லி வீதம் குடித்தால் வறட்டு இருமலுக்கு அற்புதமான நிவாரணம் கிடைக்கும்.
சீதளக் காய்ச்சல், சளிக் காய்ச்சல், நுரையீரல் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து சுரங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டது இந்தச் சாறு. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். அது ஆறிய பிறகு, வடித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், உடலில் வேர்வை நாற்றம் ஏற்படாது.
கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்துக் கொண்டு, அத்துடன் ஆளி விதை எண்ணெயை சம அளவு கலந்து பக்குவமாக காய்ச்சி பூசி வர பாத வெடிப்பு மறையும். கண்டங்கத்திரி இலை சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்தில் வயிற்று எரிச்சல், கடுப்பு நீங்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து 2 வேளை கொடுக்க குணமாகும். கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர், சுக்கு, திப்பிலி, ஓமம் போன்றவற்றை இடித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சுண்டக்காய்ச்சி காலை, மாலை குடித்து வர கபம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
Also Read | ஆண்களின் ஆரோக்கியத்திற்கான ‘சூப்பர்’ உணவுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR